மீண்டும் ஒருமுறை திரு.வைகோ அவர்களின் ம.தி.மு.க. ஈழ தமிழருக்காக போராட்டம் நடத்தி உள்ளது. இம்முறை தலைநகர் டெல்லிக்கு வரும் சிங்கள பேரினவாத அரக்கர்களின் தலைவனின் இந்திய வருகையை எதிர்த்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
போராட்டத்தில் 2000-த்திற்க்கும் அதிகமான ம.தி.மு.க. தொண்டர்கள் கலந்து கொண்டது போராட்டத்தை இந்திய அளவில் கவனிக்க வைத்துள்ளது.
திரு.வைகோ தலைமையில் திரு.எல்.ஜி,திரு.செஞ்சியார்,திரு.கண்ணப்பன், திரு.மல்லை.சத்யா மற்றும் பாராளுமன்ற,சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
காஷ்மீர் முன்னாள் முதல்வர் திரு.ப்ருக் அப்துல்லா, அகாலிதள் தலைவர் திரு.தின்ஸா, முன்னாள் ராணுவ அமைச்சர் திரு.ஜார்ஜ் பெர்ணாட்ஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அ.தி.மு.க.வின் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தை வாழ்த்தி பேசினர்.
சமாஜ் வாடி கட்சியின் தலைவர் திரு.அமர்சிங் உண்ணாவிரத போராட்டத்தை முடித்து வைத்து பேசினார்.
திரு.ப்ருக் அப்துல்லா பேசுகையில், ஆங்கிலம் பேசும் கனடா நாட்டிற்க்குள் பிரெஞ்சு மொழி பேஸும் "கியூபெக்" நாடு இருப்பது போல் இலங்கையும் இரு நாடாக பிரிக்க படுவதில் தவறில்லை என்றார்.
திரு.தின்ஸா பேசுகையில், இலங்கை விஷயத்தில் எப்போதும் தமிழர்களின் பக்கமே ஆதரவு தருவோம் என்று உறுதி அளித்ததோடு அன்றி இலங்கையில் இருந்து வரும் தமிழர்களை "அகதிகள்" என்று சொல்வது தவறு அவர்கள் நம்மில் ஒருவர் என்று கூறினார்.
திரு.வைகோ வின் பேச்சில் சிங்கள அரசின் கொடுஞ் செயல்கள் புள்ளிவிவரத்துடன் துகிலுரியப்பட்டது.
நம்பிக்கை விதைக்கும் வகையில் அமைந்த இந்த போராட்டம் இந்திய அரசின் அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வழி வகுக்கும் என்று நம்புவோம்.
போராட்டம் நடத்திய வைகோ அவர்களுக்கு நன்றிகள்.
No comments:
Post a Comment