Nov 12, 2006

இருப்பாய் தமிழா நெருப்பாய்!

கவிஞர் காசி ஆனந்தன் இருப்பாய் தமிழா நெருப்பாய் !

இருப்பாய் தமிழா நெருப்பாய்!
இருந்தது போதும் இதுவரை செருப்பாய்
இருப்பாய் தமிழா நெருப்பாய்!
குட்டக் குட்ட நீ குனிந்தால் உலகத்தில்
குட்டிக் கொண்டேதானிருப்பான் - முரசு
கொட்டி எழடா உன் பகைவன்
பிடரியில் குதிகால் பட ஓடிப் பறப்பான்!
கைவிலங்கு நீ சுமந்தாய் இதற்கோடா
கருவில் உன்னைத் தாய் சுமந்தாள்? - இனப்போர்
செய்யக் களம்வாடா கொடுமை தூள்படும்
சிறுத்தை உன கண்கள் சிவந்தால்!
வெல்லமோடா உயிர் உனக்கு? புவிகாண வீறுகொண்டு போர் இடடா! - தமிழர்
உள்ளம் மகிழ நீ களத்தில் நடடா
உயிரையும் தூக்கிக் கொடடா!
வஞ்சினம் முழக்கி எழடா! மானத்தின்
வல்லமை உன் பகை உடைக்கும் - அட
நெஞ்சில் தமிழ்வீரம் பொங்க நில்லடா!
நிமிர்ந்த வரலாறு கிடைக்கும்!

2 comments:

Anonymous said...

Fantastic.No wonder,he is calling as a "UNARCHI KAVIZHAR"

Anonymous said...

Kasi Ananthan's words are creating the fire on every readers inside.