Dec 6, 2007

தேசியத் தலைவரின் மாவீரர் நாள் உரை

தலைமைச் செயலகம்,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்।
நவம்பர் 27, 2007।

எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே!

இன்று மாவீரர் நாள்। தமிழீழச் சுதந்திரப் போரை இந்தப் பூமிப்பந்திலே முதன்மையான விடுதலைப் போராட்டமாக முன்னிறுத்திய எமது மாவீரச் செல்வங்களை நினைவுகூரும் தூயநாள். ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள்.

எமது மண்ணிலே, எமது காலத்திலே எமது கண்முன்னே வீரத்திற்கு இலக்கணமாக வாழ்ந்து, விடுதலையின் வித்தாக வீழ்ந்தவர்கள் எமது மாவீரர்கள்। எதிரிக்குத் தலைவணங்காத வணங்கா மன்னர்கள். எமது தேசவிடுதலைக்காகக் களமாடி வீழ்ந்த மாவீரர் அனைவரும் மனிதமலைகளாக, மனிதக்கோட்டைகளாகவே எமது மண்ணைக் காத்துநிற்கின்றனர்.

ஈடிணையற்ற ஈகங்கள் புரிந்து, அளப்பரிய அர்ப்பணிப்புக்கள் செய்து, எண்ணற்ற சாதனைகள் புரிந்து எமது தேசத்தின் வரலாற்றுச் சக்கரத்தை விடுதலையின் பாதையில் விரைவாக அசைத்துச் செல்பவர்கள் எமது மாவீரர்களே।

மனித வரலாற்றுச் சக்கரம், காலங்களைக் கடந்து, யுகங்களை விழுங்கி, முடிவில்லாமற் சுழல்கிறது। இந்த முடிவில்லாத இயக்கத்தில், உலகத்து மனிதன் நிறையவே மாறிவிட்டான்.

அவனிடத்தில் எத்தனையோ புதிய சிந்தனைகள் தோன்றியிருக்கின்றன் எத்தனையோ புதிய கருத்தோட்டங்கள் பிறந்திருக்கின்றன। எத்தனையோ புதிய எண்ணங்கள் அவன் மனதிலே தெறித்திருக்கின்றன. இந்தச் சிந்தனைத் தெறிப்பிலே, சுதந்திரமும் சமத்துவமும் கூடிக்குலவும் ஒரு வாழ்வை அவன் கண்டுகொண்டான். சாதி, சமய, பேதங்கள் ஒழிந்த, அநீதியும் அட்டூழியங்களும் அகன்ற, சூழ்ச்சிகளும் சுரண்டல்களும் நீங்கிய, கொந்தளிப்புக்களும் நெருக்கடிகளும் அகன்ற ஓர் உன்னத வாழ்வைக் கற்பிதம் செய்தான். இந்தக் கற்பிதத்திலிருந்து தோன்றிய கருத்துருவம்தான் சுதந்திரம். இந்த உன்னதமான கருத்துருவை வாழ்வின் உயரிய இலட்சியமாக வரித்து, மனிதன் போராடப் புயலாகப் புறப்பட்டான்.

ஓயாது வீசும் இந்த விடுதலைப் புயல் இன்று எமது தேசத்திலே மையம்கொண்டு நிற்கிறது। சுழன்றடிக்கும் சூறாவளியாக, குமுறும் எரிமலையாக, ஆர்ப்பரித்தெழும் அலைகடலாக எமது மக்கள் வரலாற்றிலே என்றுமில்லாதவாறு ஒரே தேசமாக, ஒரே மக்களாக ஒரே அணியில் ஒன்றுதிரண்டு நிற்கின்றனர்

ஒரே இலட்சியத்தில் ஒன்றுபட்ட சக்தியாக, ஒன்றுபட்ட இனமாகத் தமக்கு முன்னால் எழுந்த எல்லாத் தடைகளையும் உடைத்தெறிந்து நெஞ்சுறுதியுடன் நிமிர்ந்துநிற்கின்றனர்। எல்லைக்காப்புப் படைகளாக, துணைப்படைகளாக, விசேட அதிரடிப்படைகளாக எழுந்துநிற்கின்றனர். போர்க்கோலம் கொண்டு, மூச்சோடும் வீச்சோடும் போராடப் புறப்பட்டுநிற்கின்றனர்

முப்பத்தைந்து ஆண்டுகளாக ஓய்வில்லாமல் வீசும் எமது வீரவிடுதலை வரலாற்றில் நாம் என்றுமில்லாதவாறு தரைப்படை, கடற்படை, வான்படையென முப்படைகளும் ஒன்றுசேர ஒரு பெரும் படையாக எழுந்து, நிமிர்ந்து நிற்கிறோம்।

நீண்ட கொடிய சமர்களிற் களமாடி அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற முன்னணிப் படையணிகளோடும் பன்முகத் தாக்குதல்களையும் நிகழ்த்தவல்ல சிறப்புப் பயிற்சிபெற்ற சிறப்புப் படையணிகளோடும் நவீன படைக்கலச் சக்திகளுடனும் பெரும் போராயுதங்களுடனும் ஆட்பலம், ஆயுதபலம், ஆன்மபலம் எனச் சகல பலத்துடனும் நவீன இராணுவமாக வளர்ந்துநிற்கிறோம்

நீண்டகாலம் பெரும் சமர்களை எதிர்கொண்டு, மூர்க்கமாகப் போர்புரிந்து பெற்றெடுத்த பட்டறிவாலும் கற்றறிந்த பாடங்களாலும் கட்டப்பட்டுச் செழுமைபெற்ற புதிய போர் மூலோபாயங்களோடும் புதிய போர்முறைத் திட்டங்களோடும் நவீன போரியல் உத்திகளோடும் எதையும் எதிர்கொள்ளத் தயாராக நிற்கிறோம்।

இந்த மலையான நிமிர்விற்கு, இந்தப் பூகம்ப மாற்றத்திற்கு ஆதாரமாக நிற்பவர்கள் எமது மாவீரர்கள் என்பதை நான் இங்குப் பெருமிதத்துடன் கூறிக்கொள்ள விரும்புகிறேன்।

நாம் வாழும் உலகிலே புதிய பூகம்ப மாற்றங்கள் நிகழ்ந்துவருகின்றன। உலகமே ஆசியாவை நோக்கித் திரும்பியிருக்கிறது.

இருபத்தொராம் நூற்றாண்டும் ஆசியாவின் சகாப்தமாக ஆரம்பித்திருக்கிறது। எமது பிராந்தியத்தைச் சேர்ந்த, எமது கண்டத்தைச் சேர்ந்த நாடுகள் சமூக, பொருளாதார, விஞ்ஞானத்துறைகளிலே பெருவளர்ச்சியீட்டி முன்னேறி வருகின்றன.

அண்டவெளி ஆராய்ச்சிகள், சந்திரமண்டல ஆய்வுகள், அணுக்கருப் பரிசோதனைகளெனப் புதிய பாதையிலே பயணிக்கின்றன। மனித சமுதாயம் முன்னெப்போதும் காணாத புதிய சவால்களுக்கு முகம்கொடுத்து, இயற்கையின் எண்ணற்ற புதிர்களுக்கு விடைகள் காணவும் தீராத வியாதிகளுக்குத் தீர்வுகள் தேடவும் புதிய பயணத்திலே இறங்கியிருக்கிறது.

அரிய உயிரினங்களையும் தாவர வகைகளையுங்கூடக் காத்து, பூகோள முழுமையையும் பாதுகாக்கின்ற புனித முயற்சியிலே காலடி எடுத்துவைத்திருக்கிறது। ஆனால், சிங்களத் தேசம் மாத்திரம் நேரெதிர்த் திசையிலே, அழிவு நோக்கிய பாதையிலே சென்றுகொண்டிருக்கிறது. தன்னையும் அழித்து, தமிழினத்தையும் அழித்துவருகிறது. இதனால், அழகிய இலங்கைத்தீவு இரத்தத்தீவாக மாறியிருக்கிறது.

பௌத்தம் ஓர் ஆழமான ஆன்மீகத் தரிசனம்। அன்பையும் அறத்தையும் ஆசைகள் அகன்ற பற்றற்ற வாழ்வையும் தர்மத்தையும் வலியுறுத்தி நிற்கும் தார்மீகத் தத்துவம். இந்தத் தார்மீக நெறியை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகக் கடைப்பிடிப்பதாகக் கூறிக்கொள்ளும் சிங்களம், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகவே இனவாத விசத்தினுள் மூழ்கிக்கிடக்கிறது. சிங்கள இனவாத விசம் இன்று மிருகத்தனமான வன்முறையாகக் கோரத்தாண்டவமாடுகிறது.

அறுபது ஆண்டுகளுக்கு மேலாக வன்முறை அகன்ற அகிம்சை வழியிலும், ஆயுதவழியிலும் தமிழர் நீதிகேட்டபோதும் சிங்கள உலகிலே சிறிதளவும் மனமாற்றம் நிகழவில்லை। எத்தனையோ இழப்புக்கள், எத்தனையோ அழிவுகள், எண்ணற்ற உயிர்ப்பலிகள் நிகழ்ந்தபோதும் சிங்களத் தேசம் மனந்திருந்தவில்லை. தொடர்ந்தும், அது வன்முறைப் பாதையிலேயே பயணிக்கிறது. அடக்குமுறையாலும் ஆயுதப்பலத்தாலும் தமிழரின் தேசியப் பிரச்சினைக்குத் தீர்வுகாணவே அது விரும்புகிறது. அமைதி முயற்சிகளுக்கு ஆப்புவைத்துவிட்டு, தனது இராணுவ நிகழ்ச்சித்திட்டத்தைத் துணிவுடனும் திமிருடனும் தொடர்ந்து முன்னெடுத்துவருகிறது. இதற்குச் சர்வதேசச் சமூகத்தினது பொருளாதார, இராணுவ உதவிகளும் அரசியல் தார்மீக ஆதரவும் இராஜதந்திர முண்டுகொடுப்புக்களும் ஒருபக்கச்சார்பான தலையீடுகளுந்தான் காரணம்.

எமது பிராந்தியத்திலே உலகப் பெரு வல்லரசுகளின் இராணுவ, பொருளாதார, கேந்திர நலன்கள் புதைந்து கிடப்பதை நாம் நன்கு அறிவோம்। அந்த நலன்களை முன்னெடுக்க உலக வல்லரசுகள் முனைப்புடன் முயற்சிப்பதையும் நாம் விளங்கிக்கொள்கிறோம். இதற்கு இலங்கைத்தீவில் நெருக்கடிநிலை நீங்கி, சமாதானமும் நிலையான நல்லாட்சியும் தோன்ற அனைத்துலக நாடுகள் ஆர்வமும் அக்கறையும் காட்டுவதையும் நாம் ஏற்றுக்கொள்கிறோம்.

இதேநேரம் பேரினவாதச் சிங்கள அரசு உலகநாடுகளின் நலன்களையும் அவை எமது பிராந்தியத்திற் பதிந்திருப்பதையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முயற்சிக்கிறது। போலியான, பொய்யான பரப்புரைகள் வாயிலாக உலக நாடுகளைத் தமது வஞ்சக வலைக்குள் வீழ்;த்தி, தமிழரது விடுதலைப் போராட்டத்திற்கு எதிராகத் திருப்பிவிடுகின்ற கைங்கரியத்தைச் செய்துவருகிறது. சிங்கள அரசின் வஞ்சக வலைக்குள் வீழ்ந்து, உலகநாடுகள் எமது பிரச்சினையில் எதிர்மறையான தலையீடுகளைச் செய்வதுதான் எமக்கும் எமது மக்களுக்கும் வருத்தத்தையும் ஏமாற்றத்தையும் தருகிறது.

இப்படியான அநீதியில் அமைந்த அந்நியத் தலையீடுகள், காலங்களை விழுங்கி நீண்டுசெல்லும் எமது போராட்டத்திற்குப் புதியவை அல்ல। அன்று இந்தியா தனது தெற்கு நோக்கிய வல்லாதிக்க விரிவாக்கமாக எமது தேசியப் பிரச்சினையிலே தலையீடு செய்தது. தமிழரது சம்மதமோ ஒப்புதலோ இன்றி, சிங்கள அரசுடன் கூட்டுச்சேர்ந்து ஓர் ஒப்பந்தம் செய்தது. அடிப்படையில் அந்த ஒப்பந்தம் தமிழரது நலனுக்காகவோ நல்வாழ்விற்காகவோ செய்யப்பட்டதன்று. தீர்வு என்ற பெயரில் ஐம்பத்தேழிற் கைச்சாத்தான பண்டா - செல்வா ஒப்பந்தத்தில் இருந்த அதிகாரங்களைக்கூடக் கொண்டிராத எலும்புத்துண்டு போன்ற ஒரு அரைகுறைத் தீர்வை இந்தியா அன்று எம்மக்கள்மீது கட்டிவிட முயற்சித்தது. ஓர் இலட்சம் இராணுவத்தினரின் பக்கபலத்தோடும் இரண்டு அரசுகளின் உடன்பாட்டு வலிமையோடும் எட்டப்பர் குழுக்களின் ஒத்துழைப்போடும் அந்த ஒப்பந்தத்தைச் செயற்படுத்திவிட இந்தியா தீவிரமாக முயற்சித்தது.

தமிழரது தேசியப் பிரச்சினையின் அடிப்படைகள் எதையும் தொட்டுநிற்காத, தமிழரின் அரசியல் அபிலாசைகள் எதையும் பூர்த்திசெய்யாத அந்த அரைகுறைத் தீர்வைக்கூடச் செயற்படச் சிங்களப் பேரினவாதிகள் அன்று அனுமதிக்கவில்லை।

சிங்களத் தேசம் பற்றியும் அதன் நயவஞ்சக அரசியல் பற்றியும் நாம் நன்கு அறிவோம்। எமக்கு அதுபற்றிய நீண்ட பட்டறிவும் கசப்பான வரலாறும் இருக்கின்றன. எனவேதான், நாம் அன்று இந்தியாவுடன் பல்வேறு தடவைகள் பல்வேறு இடங்களிற் பல்வேறு மட்டங்களில் நடந்த பேச்சுக்களின்போது, சிங்களப் பேரினவாதம் பற்றி அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக்கூறினோம். தமிழர் பிரச்சினைக்குத் தீர்வுகண்டு, தமிழர் தேசத்தில் அமைதியைக் கொண்டுவருவது சிங்கள அரசின் நோக்கமன்று, தமிழர் தேசத்தை ஆக்கிரமித்து, தமிழரின் வளங்களை அழித்து, தமிழரை அடிமைகொண்டு, அழித்தொழிப்பதுதான் சிங்கள அரசின் நோக்கம் என்பதை அன்று இந்தியாவிற்கு எடுத்துரைத்தோம். இந்தியா இணங்கமறுத்தது. இதனால், தமிழ் மக்கள் தமது மண்ணிலேயே பெரும் அழிவுகளையும் அனர்த்தங்களையும் சந்தித்தனர்.

அன்று இந்தியா இழைத்த தவறை இன்று சர்வதேசமும் இழைத்து நிற்கிறது। சிங்கள அரசின் சாதுரியமான, சாணக்கியமான பரப்புரைகளுக்குப் பலியாகி, சமாதான முயற்சிகளுக்குப் பாதுகாவலனாக நின்ற நாடுகளே, எமது விடுதலை இயக்கத்தைப் பயங்கரவாத அமைப்பாகப் பட்டியலிட்டிருக்கின்றன. இதில் வேதனையான, ஏற்றுக்கொள்ள முடியாத விடயம் என்னவென்றால் ஒருகாலத்தில் எம்மைப் போன்று தமது சுதந்திரத்திற்காகப் போராடிய தேசங்களும் எம்மைப் பயங்கரவாதிகளாகப் பட்டஞ்சூட்டியமைதான்.

இவற்றுக்கும் மேலாக, புலம்பெயர்ந்து வாழும் எமது மக்கள் தாம் வாழும் நாடுகளிலே பலம்பொருந்திய சக்தியாக நின்று, தமிழீழ விடுதலைப் போருக்கு உதவி வருவதையும் அரசியல் ஆதரவைத் திரட்டிவருவதையும் சிங்களத் தேசத்தாற் பொறுத்துக்கொள்ள முடியவில்லை।

சிங்களப் பேரினவாதத்தின் கோரப்பிடிக்குட்சிக்கி, எம்மக்கள் அழிந்துவருவதையும் அந்தப் பேரழிவைத் தடுக்க, புலம்பெயர்ந்த மக்கள் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானப் பணிகளையும் மேற்கொண்டுவருவதையும் சிங்களப் பேரினவாதத்தாற் சகிக்கமுடியவில்லை।

எனவேதான், புலம்பெயர்ந்து வாழும் மக்களுக்கும் தாயக மக்களுக்கும் இடையிலான உறவுப்பாலத்தை உடைத்து, தமிழீழ விடுதலைப் போராட்டத்தை நசுக்கிவிடச் சிங்களப் பேரினவாதம் தீவிரமாக முயற்சித்துவருகிறது।
இந்த அநியாயத்திற்குச் சில உலக நாடுகளும் துணைபோகின்றன।

எம்மக்கள் தாம் வாழும் நாடுகளின் அரசியற்சட்டங்களுக்கு அமைவாக, நீதி தவறாது மேற்கொள்ளும் அரசியற் போராட்டங்களையும் மனிதாபிமானச் செயற்பாடுகளையும் படுபாதகமான குற்றவியற் செயல்களாக இந்நாடுகள் காட்டிவருகின்றன। தமிழ் மக்களின் பிரதிநிதிகளையும் தமிழின உணர்வாளர்களையும் கைதுசெய்து, சிறைகளிலே அடைத்து, அவமானப்படுத்தியிருக்கின்றன. நீதி கேட்டு, நியாயம் கோரி எம்மக்கள் நடாத்திய போராட்டங்களைக் கீழ்த்தரமாகக் கொச்சைப்படுத்தியிருக்கின்றன

இத்தகைய நடுநிலை தவறிய ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் சர்வதேசச் சமூகம்மீது எம்மக்கள் கொண்டிருந்த ஆழமான நம்பிக்கைகளை மோசமாகப் பாதித்திருப்பதோடு அமைதி முயற்சிகளுக்கும் ஆப்புவைத்திருக்கின்றன் சமாதானப் பேச்சுக்களிற் பங்குகொண்ட இருதரப்பினரது சமநிலை உறவைப் பாதித்து, அமைதி ஒப்பந்தமும் முறிந்துபோக வழிசெய்திருக்கின்றன

அத்தோடு, இந்நாடுகள் வழங்கிவரும் தாராளப் பொருளாதார இராணுவ உதவிகளும் இரகசியமான இராஜதந்திர முண்டுகொடுப்புக்களும் சிங்கள இனவாத அரசை மேலும்மேலும் இராணுவப் பாதையிலேயே தள்ளிவிட்டிருக்கிறன।

இதனால்தான், மகிந்த அரசு அநீதியான, அராஜகமான ஆக்கிரமிப்புப் போரை எமது மண்ணிலே துணிவுடனும் திமிருடனும் தொடர்ந்துவருகிறது

இராணுவப் பலத்தைக்கொண்டு, தமிழரின் சுதந்திர இயக்கத்தை அழித்துவிடலாம் என்ற மமதையில் மகிந்த அரசு சமாதானத்திற்கான கதவுகளை இறுகச்சாத்தியது। தமிழ் மண்ணை ஆக்கிரமித்து, தமிழரை அடக்கியொடுக்கி ஆளவேண்டும் என்ற ஆசை என்றுமில்லாதவாறு தீவிரம்பெற்றது. முழுஉலகமும் முண்டுகொடுத்துநிற்க, போர்நிறுத்தத்தைக் கவசமாக வைத்து, சமாதானச் சூழலை வாய்ப்பாகப் பயன்படுத்தி, மகிந்த அரசு ஆக்கிரமிப்புப் போரை அரங்கேற்றியது.

போர்நிறுத்தத்தைக் கண்காணித்த கண்காணிப்புக்குழு கண்களை மூடிக்கொண்டும் கைகளைக் கட்டிக்கொண்டும் கொழும்பிலே படுத்துறங்கியது। அனுசரணையாளரான நோர்வே நாட்டினர் அலுத்துப்போய் அமைதியாக இருந்தார்கள். எமக்குச் சமாதானம் போதித்த உலக நாடுகள் மௌனித்துப் பேசமறுத்தன.

"சமாதானத்திற்கான போர் என்றும் "பயங்கரவாதத்திற்கு எதிரான கூட்டு நடவடிக்கை" என்றும் "தமிழரின் விடுதலைக்காக, விமோசனத்திற்காக நடாத்தப்படும் போர்" என்றும் சிங்கள அரசு தமிழின அழிப்பை நியாயப்படுத்திப் போரைத் தொடர்கிறது।

மகிந்த அரசு தனது முழுப் படைப்பலச்சக்தியையும் அழிவாயுதங்களையும் ஒன்றுதிரட்டி எமது தாயகத்தின் தெற்குப் பிராந்தியம் மீது பெரும் போரைக் கட்டவிழ்த்துவிட்டது

ஓயாத மழையாகப் பொழிந்த அகோரக் குண்டுவீச்சுக்களாலும் எறிகணைகளாலும் எமது பண்டைய நாகரிகம் புதைந்த வரலாற்றுமண் மயானபூமியாக மாறியது।

சரித்திரப் பிரசித்தி பெற்ற தமிழரின் தலைநகரான திருமலை சிதைக்கப்பட்டது। தமிழரின் பண்டைய பண்பாட்டு நகரான மட்டக்களப்பு அகதிகளின் நகரானது. வடக்கில் தமிழரின் கலாச்சார மையமான யாழ்ப்பாணம் வெளியுலகத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டு, திறந்தவெளிச் சிறைச்சாலையாக மாற்றப்பட்டது.

மொத்தத்தில், சிங்கள அரசின் தமிழின அழிப்புப்போர் தமிழரின் நிம்மதியான வாழ்வைக் கெடுத்து, தமிழரை அகதிகளாக்கி, தமிழரின் சமூக, பொருளாதார வாழ்வைச் சீரழித்து, தமிழருக்கு என்றுமில்லாத பேரவலத்தைக் கொடுத்திருக்கிறது।

எமது தாய்நிலம், ஒருபுறம் சிங்கள இராணுவப் பேயாட்சிக்குட் சிக்கிச்சீரழிய, மறுபுறம் உயர்பாதுகாப்பு வலயங்கள், விசேட பொருளாதார வலயங்கள் என்ற பெயரில் வேகமாகச் சிங்களமயப்படுத்தப்படுகிறது

சிங்கக் கொடிகளை ஏற்றியும் சித்தார்த்தன் சிலைகளை நாட்டியும் வீதிகளுக்குச் சிங்களப் பெயர்களை மாற்றியும் பௌத்த விகாரைகளைக் கட்டியும் சிங்களமயமாக்கல் கடுகதி வேகத்திலே தொடர்கிறது।

இதன் உச்சமாக, தமிழீழத்தின் தென் மாநிலம் முழுவதிலும் சிங்களக் குடியேற்றங்கள் காளான்கள் போன்று அசுரவேகத்திலே முளைத்துவருகின்றன

அநீதியான யுத்தம் ஒன்றை நடாத்தி, பொருளாதாரத் தடைகளை விதித்து, போக்குவரத்துச் சுதந்திரத்தை மறுத்து, தமிழரைக் கொன்றுகுவித்து, இலட்சக்கணக்கில் இடம்பெயரவைத்துவிட்டு, தமிழின ஆன்மாவை ஆழமாகப் பாதித்த இந்தச் சோகமான நிகழ்வைச் சிங்களத் தேசம் வெற்றிவிழாவாகக் கொண்டாடிமகிழ்கிறது।

தமிழரைப் போரில் வென்றுவிட்டதாகப் பட்டாசு கொழுத்தி, வாணவேடிக்கைகள் காட்டி ஆர்ப்பரிக்கிறது। கிழக்கு மீதான முற்றுகைவலயம் முற்றுப்பெற்றுவிட்டதாகவும் யாழ்ப்பாணத்தின் கழுத்தைச் சுற்றி முள்வேலியை இறுக்கிவிட்டதாகவும் சிங்கள இராணுவத் தலைமை எண்ணிக்கொண்டது.

பொத்துவில் தொடக்கம் புல்மோட்டை வரை, கிழக்குக் கரையோரம் முழுமைக்கும் விலங்கிட்டுவிட்டதாகச் சிங்களப் பேரினவாதம் திமிர்கொண்டது। புலிகளுக்கு எதிரான போரிற் பெருவெற்றி ஈட்டிவிட்டதாகச் சிங்கள ஆட்சிப்பீடம் திருப்திகொண்டது

எமது விடுதலை இயக்கத்தையும் எமது விடுதலைப் போராட்டத்தையும் சிங்களத் தேசம் எப்போதும் தவறாகவே புரிந்துகொள்கிறது। குறைத்தே மதிப்பீடுசெய்கிறது.

பூகோள அமைப்பையும் புறநிலை உண்மைகளையும் மிகவும் துல்லியமாகக் கணிப்பிட்டு, எதிரியின் பலத்தையும் பலவீனத்தையும் சரியாக எடைபோட்டு, எதிர்விளைவுகளை மதிப்பீடு செய்து, இவற்றின் அடிப்படையிலேயே நாம் எமது போர்த்திட்டங்களைச் செயற்படுத்துகிறோம்। எதிரியின் யுத்த நோக்குகளையும் உபாயங்களையும் முன்கூட்டியே தீர்க்கதரிசனமாக அனுமானித்தறிந்தே, எமது போர்த்திட்டங்களை வகுக்கிறோம்

இப்படித்தான் கிழக்கிலும் எமது போர்த்திட்டங்களை வகுத்தோம்। தற்காப்புத் தாக்குதல்களை நடாத்தியவாறு தந்திரோபாயமாகப் பின்வாங்கினோம்.

புலிகளின் தேசத்தில் அகலக்கால் நீட்டுவதும் நீட்டிய காலை நிலையாக வைத்திருப்பதும் எத்தனை ஆபத்தான விவகாரம் என்பதை சிங்களம் "ஜெயசிக்குறு சமரிற் கற்றறிந்திருக்கலாம்। ஆனால், சிங்கள இராணுவம் நாம் விரித்த வலைக்குள் வகையாக விழுந்து, பெருந்தொகையில் படையினரை முடக்கி, ஆளில்லாப் பிரதேசங்களை இன்று ஆட்சிபுரிகிறது.

நில அபகரிப்பு என்ற பொறியிற் சிங்களம் மீளமுடியாதவாறு மீளவும் விழுந்திருக்கிறது। இதன் பாரதூரமான விளைவுகளை அது விரைவிற் சந்தித்தே ஆகவேண்டிவரும்.

வரலாற்றிலே முதல்தடவையாக எமது கரும்புலி அணியினரும் வான்புலிகளும் கூட்டாக நடாத்திய "ல்லாளன் நடவடிக்கை சிங்கள இராணுவப்பூதத்தின் உச்சந்தலையிலே ஆப்பாக இறங்கியிருக்கிறது। இந்த மண்டை அடி சிங்களம் கட்டிய கற்பனைகள் கண்டுவந்த கனவுகள் அத்தனையையும் அடியோடு கலைத்திருக்கிறது.

அநுராதபுர மண்ணில் எம்மினிய வீரர்கள் ஏற்படுத்திய இந்தப் பேரதிர்விலிருந்து சிங்களத் தேசம் இன்னும் மீண்டெழவில்லை।

ஈகத்தின் எல்லையைத் தொட்டுவிட்ட இந்த வீரர்களின் உயர்ந்த உன்னதமான அர்ப்பணிப்பு சிங்களத் தேசத்திற்கு ஒரு செய்தியைச் சொல்கிறது। அதாவது, தமிழனை அழிக்க நினைப்போருக்கு அழிவு நிச்சியம் என்பதோடு, இந்த மாவீரர்கள் பற்றவைத்துள்ள விடுதலைத்தீயின் எரிநாக்குகளிலிருந்து ஆக்கிரமிப்பாளர்கள் எங்கிருந்தாலும் தப்பிவிடமுடியாது என்பதுதான் அது.

இராணுவ அடக்குமுறை என்ற அணுகுமுறை மூலம் தமிழரின் தேசியப் பிரச்சினையைத் தீர்க்கமுடியாது என்பதை மகிந்த அரசு இனியும் உணர்ந்துகொள்ளப்போவதில்லை। இராணுவ மேலாதிக்கத்தை எட்டிப்பிடிக்கவேண்டும், தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்துச் சிங்களமயமாக்கிவிடவேண்டும் என்ற ஆதிக்கவெறியும் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்து அகன்றுவிடப்போவதில்லை.

தொடர்ந்தும் கோடிகோடியாகப் பணத்தைக் கொட்டி, உலகெங்கிலிருந்தும் அழிவாயுதங்களையும் போராயுதங்களையும் தருவிக்கவே மகிந்த அரசு முனைப்புடன் செயற்படுகிறது। எனவே, மகிந்த அரசு தனது தமிழின அழிப்புப்போரைக் கைவிடப்போவதில்லை.

தனது பாரிய இராணுவத் திட்டத்தையும் அதன் விளைவாகத் தமிழீழ மண்ணில் ஏற்பட்டுவரும் பேரவலங்களையும் மூடிமறைத்து, உலகத்தின் கவனத்தைத் திசைதிருப்பி, உலக நாடுகளின் உதவியையும் பேராதரவையும் பெற்றுக்கொள்ளவே மகிந்த அரசு அனைத்துக்கட்சிப் பிரதிநிதிகள் குழுவை அமைத்தது।

இதனைக் கடந்த மாவீரர் நினைவுரையில் நான் தெளிவாக எடுத்துக்கூறியிருந்தேன்

வருடக்கணக்கிற் காலத்தை இழுத்தடித்து, எந்தவிதமான தீர்வையும் முன்வைக்கமுடியாது, இறுதியில் இரண்டு மாத விடுப்பிற் பிரதிநிதிகள் குழுவினர் சென்றிருப்பது இதனையே காட்டிநிற்கிறது।

தமிழரின் தேசியப் பிரச்சினையை நீதியான முறையிற் சமாதான வழியில் தீர்த்துவைப்பதற்கான அரசியல் நேர்மையும் உறுதிப்பாடும் தென்னிலங்கையில் எந்த அரசியற் கட்சியிடமுமில்லையென்பது கடந்த அறுபது ஆண்டுகளில் தெட்டத்தெளிவாக வெளிப்பட்டிருக்கிறது।

தமிழரின் தாயகம், தேசியம், தன்னாட்சியுரிமை ஆகிய மூலாதாரக் கோட்பாடுகளை ஏற்றுக்கொள்ளவும் தமிழரின் தேசியத் தனித்துவத்தை அங்கீகரிக்கவும் தென்னிலங்கைக் கட்சிகள் தயாரில்லையென்பதும் இன்று சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது। ஒற்றையாட்சிக்குள்தான் தீர்வு என ஆளும்கட்சி அடம்பிடிப்பதும் தீர்வுத்திட்டமே வேண்டாம் என மஞ்சள், சிவப்புக் கட்சிகள் பிடிவாதமாக நிற்பதும் கடந்தகால நிலைப்பாடுகளிலிருந்து குத்துக்கரணம் அடித்து, அரசின் போர் நடவடிக்கைக்கும் ஆதரவு, சமாதான முயற்சிகளுக்கும் ஆதரவு எனப் பிரதான எதிர்க்கட்சி எதையும் தெளிவாகக் கூறாது இழுவல் மொழியில் நழுவிக் கண்ணாம்பூச்சி விளையாடுவதும் இதனைத்தான் தெளிவுபடுத்துகின்றன.

இதன்மூலம் சிங்கள அரசியற் கட்சிகள் அனைத்தும் அடிப்படையில் தமிழின விரோதப் பேரினவாதக் கட்சிகள் என்பது சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கப்பட்டிருக்கிறது। இப்படியான இனவாதக் கட்சிகளிடமிருந்து யாரும் தீர்வை எதிர்பார்த்தால், அது அரசியல் அசட்டுத்தனமேயன்றி வேறொன்றுமன்று।

சிங்களப் படைகளின் "அக்கினிக்கீல" என்ற பாரிய படைநடவடிக்கையைத் தவிடுபொடியாக்கி, போரிற் புலிகளை வெற்றிகொள்ளமுடியாது என்பதைச் சிங்களத் தேசத்திற்கு இடித்துரைத்தபோதுதான் அன்று சிங்களம் அமைதி முயற்சிக்கு ஆர்வம்காட்டியது।

எமது உயரிய போராற்றலை வெளிப்படுத்தி, இராணுவ மேலாதிக்கநிலையில் நின்றபோதுதான் சிங்களத் தேசம் அமைதி ஒப்பந்தத்திற் கைச்சாத்திட்டது।

உலக நாடுகளிலிருந்து பெற்ற தாராள நிதியுதவிகளையும் ஆயுத உதவிகளையுங் கொண்டு தனது சிதைந்துபோன இராணுவ இயந்திரத்தைச் செப்பனிட்டு, தனது இராணுவ அரக்கனைப் போரிற்குத் தயார்ப்படுத்திச் சிங்களத் தேசம் சமாதான வழியிலிருந்தும் சமரசப் பாதையிலிருந்தும் விலகித் தனது பழைய இராணுவப்பாதையிற் பயணிக்கிறது।

மகிந்த அரசு ஒருதலைப்பட்சமாகப் போர்நிறுத்தத்தை முறித்து, தமிழர் தாயகத்தின் புவியியல் ஒருமைப்பாட்டையும் தனித்துவத்தையும் அழித்தொழிக்கும் இராணுவச் செயற்றிட்டத்தை இன்று ஈவிரக்கமின்றிச் செயற்படுத்திவருகிறது।

ஆயிரக்கணக்கில் எம்மக்களைக் கொன்றுகுவித்து, கடத்திப் புதைகுழிகளுக்குட் புதைத்து, பெரும் மனித அவலத்தை எம்மண்ணில் நிகழ்;த்திவருகிறது।

அனுசரணையாளரான நோர்வேயை அதட்டி அடக்கிவருகிறது। கண்காணிப்புக்குழுவைக் காரசாரமாக விமர்சித்துவருகிறது. தனது பயங்கரவாதத்தை மூடிமறைக்க ஐ.நாவின் உயர் அதிகாரிகளைக்கூடப் பயங்கரவாதிகளாகச் சித்திரிக்கிறது. செய்தியாளர்களோ தொண்டுநிறுவனங்களோ செயற்படமுடியாதவாறு தமிழர் தாயகத்திற் பதற்றத்தையும் பயப்பீதியையும் உருவாக்கி, உண்மை நிலைவரத்தை உலகிற்கு மறைத்துவருகிறது.

உலக நாடுகள் தமது சொந்தப் பொருளாதாரக் கேந்திர நலன்களை முன்னெடுக்கின்ற போதும் மனித உரிமைகளுக்கும் ஜனநாயக விழுமியங்களுக்கும் மதிப்புக்கொடுக்கத் தவறுவதில்லை। இந்தப் பிரபஞ்சமும் சரி, மனித வாழ்வியக்கமும் சரி, உலக உறவுகளும் சரி தர்மத்தின் சக்கரத்திலேயே இன்னமும் சுழல்கின்றன.

இதனால்தான், விடுதலைக்காகப் போராடிய கிழக்குத்தீமோர், மொன்ரிநீக்ரோ போன்ற தேசங்கள் சர்வதேசத்தின் ஆதரவோடும் அனுசரணையோடும் புதிய தேசங்களாக அடிமை விலங்கை உடைத்தெறிந்துகொண்டு விடுதலை பெற்றன। கொசோவோ போன்ற தேசங்களின் விடுதலைக்காகவும் சர்வதேசம் தொடர்ந்தும் தீவிரமாகச் செயற்பட்டுவருகிறது.

இருப்பினும், எமது தேசியப் பிரச்சினையிற் சர்வதேச நாடுகளின் நகர்வுகளும் நடவடிக்கைகளும் எம்மக்களுக்குத் திருப்தி தருவனவாக அமையவில்லை।

இந்நாடுகள் மீது எம்மக்கள் வைத்திருந்த நம்பிக்கை இன்று தகர்ந்துபோயிருக்கிறது। இந்நாடுகளின் நடுநிலைச் செயற்பாட்டிலே இன்று பெரும் கேள்விக்குறி எழுந்திருக்கிறது.

சமாதானத்திற்காக உழைத்த எமது தவப்புதல்வன் தமிழ்ச்செல்வனைச் சர்வதேசம் சமாதானம் பேசியே சாகடித்திருக்கிறது। அமைதிப் பாதையில் இயங்கிய எமது விடுதலை இயக்கத்தின் இதயத்துடிப்பை வலுக்கட்டாயமாக இழுத்து நிறுத்தியிருக்கிறது.

எமது இதயங்களில் இலட்சிய நெருப்பை மூட்டி, மறைந்த மாவீரருக்கு ஆண்டுதோறும் விளக்கேற்றும்போது எப்போதும் என்னருகிருந்த எனது அன்புத்தம்பி தமிழ்ச்செல்வனுக்கும் சேர்த்து இம்முறை என்கையால் ஈகச்சுடரேற்றும் நிலைமையைச் சர்வதேசம் உருவாக்கியிருக்கிறது।

உலகத் தமிழினத்தையே கண்ணீரிற் கரைத்து, கலங்கியழவைத்திருக்கிறது। சிங்களத் தேசத்தின் சமாதான விரோதப்போக்கை, போர்வெறியை உலக நாடுகள் உறுதியோடு கண்டித்திருந்திருந்தால், தமிழ்ச்செல்வன் இன்று உயிரோடு இருந்திருப்பான்.

சமாதானத்திற்கு இப்படியொரு பேரிடி விழுந்திருக்காது। சமாதானத்தின் காவலர்களாக வீற்றிருக்கும் இணைத்தலைமை நாடுகளும் இந்தப் பெரும் பொறுப்பிலிருந்து தவறியிருக்கின்றன. சமாதானத்தைப் பாதுகாக்கும் பெரும் பொறுப்பும் தார்மீகக் கடமைப்பாடும் இந்த இணைத்தலைமை நாடுகளுக்கு இல்லையென்றால் காலத்திற்குக்காலம் இடத்திற்கிடம் அவர்கள் மாநாடு கூட்டுவதன் அர்த்தம்தான் என்ன?

சிங்கள அரசிற்குச் சீர்வரிசை செய்து, ஆயுத உதவிகள் அளித்து, தமிழரை அழித்துக்கட்டத் துணைபோவதுதான் இந்த நாடுகளின் உள்ளார்ந்த நோக்கமா?

இத்தனை கேள்விகள் இன்று எம்மக்களது மனங்களிலே எழுந்திருக்கின்றன

எனவே, சர்வதேசச் சமூகம் இனியாவது எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக நீதியான புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என எமது மக்கள் உறுதியாக நம்புகின்றனர்। இனஅழிப்பைத் தொடரும் சிங்கள அரசிற்கு இராணுவப் பொருளாதார உதவிகள் வழங்குவதை அடியோடு நிறுத்தி, சர்வதேசச் சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும் இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்கும் என எமது மக்கள் இன்றைய புனிதநாளிலே எதிர்பார்த்து நிற்கின்றனர்.

நாம் பூமிப்பந்திலே வாழ்கின்ற தனித்துவமும் விசேட பண்புகளும் கொண்ட ஒரு சிறப்புவாய்ந்த இனம்; மிகவும் தொன்மை வாய்ந்த இனம்; தனித்துவமான இன அடையாளங்களோடும் தேசிய இனக்கட்டமைப்போடும் வாழுகின்ற ஓர் இனம்।

நீண்ட காலமாக அகிம்சை வழியிலும் ஆயுத வழியிலும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக, விடிவு தேடி, விடுதலை வேண்டிப் போராடிவருகிறோம்। நாம் காலங்காலமாகப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த எமது சொந்த மண்ணில் எமக்கேயுரித்தான வரலாற்று மண்ணில் அந்நியரிடம் பறிகொடுத்த ஆட்சியுரிமையை மீளநிலைநாட்டுவதற்காகவே போராடிவருகிறோம்.

இழந்துவிட்ட எமது இறையாண்மையை மீளநிறுவி, எமது சுதந்திரத் தேசத்தை மீளக்கட்டியெழுப்புவதற்காகவே நாம் போராடிவருகிறோம்

எமது மக்களின் இந்த நீதியான, நியாயமான, நாகரிகமான போராட்டத்தைச் சிங்களத் தேசம் தொடர்ந்தும் ஏற்றுக்கொள்ள மறுத்துவருகிறது। மாறாக, எம்மண்மீதும் மக்கள்மீதும் பெரும் இனஅழிப்புப் போரை, ஆக்கிரமிப்புப் போரைக் கட்டவிழ்த்துவிட்டிருக்கிறது. போர் என்ற போர்வையில் மாபெரும் மனித அவலத்தை ஏற்படுத்திவருகிறது.

அறுபது ஆண்டுக்காலமாக அநீதி இழைக்கப்பட்டு, அடக்குமுறைக்கு ஆட்பட்டு, சாவும் அழிவும் எண்ணில்லா இன்னல்களும் குடிபெயர்ந்த அகதிவாழ்வுமாக எம்மக்களின் அன்றாடச் சீவியம் சீரழிந்த போதும் எமக்காக எந்தவொரு நாடோ, எந்தவோர் அமைப்போ குரல்கொடுக்கவில்லை। ஆதரவோ அனுதாபமோ தெரிவிக்கவில்லை. உலகமே கண்ணை மூடிக்கொண்டு, பாராமுகமாகச் செயற்படுகிறது

பூமிப்பந்தெங்கும் எண்பது மில்லியன் தமிழர் பரந்துவாழ்ந்த போதும், எமக்கென ஒரு நாடு இல்லாதமைதான் இந்தப் பரிதாப நிலைக்கு - இந்த மோசமான நிலைமைக்குக் காரணம்।

எனவே, எமது மாவீரர்களை நினைவுகூரும் இன்றைய எழுச்சிநாளில் உலகம் முழுவதும் வாழ்கின்ற தமிழ்மக்கள் அனைவரையும் தமிழீழ விடுதலைக்காக உணர்வெழுச்சியுடன் கிளர்ந்தெழுமாறு வேண்டிக்கொள்கிறேன்।

அறிவுவளம், செயல்வளம், பொருள்வளம், பணவளம் என உங்களிடம் நிறைந்துகிடக்கும் அனைத்து வளங்களையும் ஒன்றுதிரட்டி, எமது விடுதலைப் போராட்டத்திற்கு நீங்கள் வழங்கிய பங்களிப்புக்களுக்கும் உதவிகளுக்கும் இச்சந்தர்ப்பத்திலே எனது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்।

இதேபோன்று வருங்காலத்திலும் நிறைந்த பங்களிப்பை வழங்குமாறு அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறேன்।

சத்திய இலட்சியத்திற்காகச் சாவைச் சந்தித்துச் சரித்திரமாவதற்கு ஆயிரமாயிரம் வீரர்கள் எமது விடுதலை இயக்கத்தில் அணிவகுத்து நிற்கும் வரை, எமக்கு முன்னால் எழுகின்ற எல்லாத் தடைகளையும் நாம் உடைத்தெறிந்து போராடுவோம்।

எதையும் தாங்கும் இதயத்துடனும் இரும்பையொத்த இலட்சிய உறுதியுடனும் அஞ்சாத வீரத்துடனும் எமது வீரர்கள் சமராடும் வரை, எத்தனை துயர் வரினும் எத்தனை இடர் வரினும் நாம் எமது விடுதலைப் பாதையிலே தொடர்ந்து போராடுவோம்।

புனித இலட்சியத்திற்காகத் தம்மையே ஆகுதியாக்கிக்கொண்ட எமது மாவீரரை நினைவுகூரும் இன்றைய நாளில் நாம் ஒவ்வொருவரும் அந்த மாவீரரின் இலட்சியக் கனவை எமது நெஞ்சங்களிலே சுமந்து, அந்த மாவீரரின் இறுதி இலட்சியம் நிறைவுபெறும் வரை தொடர்ந்து போராடுவோம்।

புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்

வே। பிரபாகரன்
தலைவர்
தமிழீழ விடுதலைப் புலிகள்.

May 9, 2007

ஈழத்தமிழர் படுகொலைகள் - பாகம் 2

1983 - இன கலவரம்
சிங்கள வெறியர்கள் நடத்திய ஈழ வரலாற்று வன்முறைகளில் மிக மோசமான வன்முறைகள்
,கொலைச் செயல்கள் அரங்கேற்றப்பட்ட ஆண்டு 1983 ஆகும்.
இலங்கையின் வடமாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் மே
1983_ல் நடைப்பெறுமென அரசாங்கம் அறிவித்தது.ஆயினும் 98% மக்கள் தேர்தலை புறக்கணித்தனர்.தேர்தலை ஒட்டி வந்திறங்கிய சிங்கள ராணுவம் யாழ்பாணம் கந்தர்மடை பகுதியில் கடைகளுக்கு தீயிட்டதுடன் வீடுகளுக்குள் புகுந்து விலையுயர்ந்த பொருட்களை கொள்ளை அடித்தனர்.வவுனியாவிலும் வன்முறை கும்பல் தாக்க தொடங்கியது.குறிப்பாக திரிகோணமலையில் சிங்கள ராணுவமும்,குண்டர்களும் ஒன்றாய் கூடி பொது மக்களை கொல்லத் தொடங்கினர்.01 ஜுலை 1983_ல் தமிழ் தேசிய அமைப்பினர் கூடி திரிகோணமலையில் போரட்டத்தை தொடங்கினர்.கொழும்புவில் இருந்து வந்த ரயிலுக்கு இரண்டு தமிழ் இளைஞர்கள் தீ வைத்தனர்.
இரண்டு மூத்த போராட்ட தலைவர்கள் திரு।டாக்டர்.அமிர்தலிங்கம் மற்றும் கோவை மகேசன் கைது செய்யப்பட்டு கொழும்பு கொண்டு செல்லப்பட்டனர்.யாழ்பாணத்திலிருந்த இரண்டு பத்திரிக்கை அலுவலகங்கள் சீல் வைக்கப்பட்டன. இதன் எதிரொலியாய் திருநெல்வேலியில் நடந்த கிளைமோர் தாக்குதல்களில்
13 சிங்கள ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

ஜுலை 24_1983 ஞாயிற்று கிழமை சிங்கள அரசாங்கத்தின் அனுமதி பெற்ற வன்முறை கும்பல் அரசு பேருந்துகளிலும்,தனியார் பேருந்துகளிலும் ஏறி தமிழர்களை இனத்தை இழிவுப்படுத்தும் வார்தைகளால் பழிக்கத் தொடங்கினர்.இதன் விளைவால் வன்முறையை தொடங்கி தமிழர்களின் வீடுகள்,கடைகள் தாக்கப்பட்டன.திங்கள் கிழமை இந்த வன்முறை கொழும்புவின் பிற பகுதிகளுக்கு பரவ தொடங்கியது.சாலைகளில் வாகனத்தில் பயணம் சென்றவர்கள் சோதனை செய்யப்பட்டனர்.அவர்கள் தமிழர் என்று தெரிந்தால் அங்கேயே தாக்கப்பட்டனர் அதில் சிலர் கொல்லப்பட்டனர்.
திங்கள் கிழமை மாலை 4.00_மணியளவில் அரசாங்கம் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது.அடுத்த நாள் செவ்வாய் கிழமை வரை நீட்டிக்கப்பட்டது.மீண்டும் 27_ந் தேதி மாலை 4.00 முதல் 5.00மணி வரை ஊரடங்கு போடப்பட்டது.ஊரடங்கு அமுலில் இருந்த போதும் வன்முறையாளர்கள் தேர்தல் வாக்கு அட்டவணையின் உதவியுடன் தமிழர்களின் வீட்டு விலாசத்தை அறிந்து வீடு புகுந்து படு கொலைகளை அரங்கேற்றினர். இந்த வன்முறைகள் நடந்த போது சிங்கள் ராணுவம் கட்டவிழ்த்து வன்முறையாளர்களை தடுக்ககூடாது என்று காவல்துறைக்கு உத்தரவு பிறப்பித்தது.
இந்நாட்களில் சுற்றுலா வந்திருந்த பயணிகள்,வன்முறைகளை நேரில் கண்டவர்கள்,வன்முறையை தடுக்க வேண்டிய காவல்துறை வேடிக்கை பார்த்தது என்று கூறினர்.
இன கலவரம் கொழும்பு நகரில் கட்டுப்படுத்த படாத காரணத்தால் வன்முறையாளர்கள் கண்டி நகரின் வீதிகளில் தமிழர்களை கொல்வதற்க்கு தேடி அலைந்தனர். திரிகோணமலையில்
26_ஜுலை அன்று 200 தமிழர்களின் வீடுகளை மொத்தமாய் தீ வைத்து கொளுத்தினர்.திரிகோணமலையில் சிங்கள கடற்படை தளம் இருந்ததால் வன்முறையாளர்கள் இன்னும் அதிக அக்கிரமங்கள் செய்தனர்.
யாழ்பாணத்தில்
23_ஜுலை அன்று சிங்கள ராணுவம் சாலையில் சென்றோர் மீது திடீர் துப்பாக்கி சூடு நடத்தியது அதில் 50 அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்டனர்.

வெளிக்கடை சிறையில் 25_ஜுலை அன்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த 35 தமிழர்கள் சிங்கள குற்றவாளிகளால் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்திற்க்கு பிறகு 28 தமிழ் கைதிகளை Youth Ward என்ற பிரிவுக்கு மாற்றினர்.மீண்டும் 27_ஜுலை அன்று சிங்கள குற்றவாளிகளால் சிறை மதில் சுவற்றை தாண்டி குதித்து வந்தனர்.இம்முறை அவர்களிடம் ஆயுதங்களும் இருந்தன். 28 தமிழ் கைதிகளில்,தமிழ் சமுதாயத்திற்காக் பெரிதும் பாடுப்பட்ட திரு.டாக்டர்.ராஜசுந்தரம் என்பவரும் ஒருவர்.தாக்க வரும் சிங்களர்களிடம் இருந்து தன் தமிழ் தம்பிமார்களை காத்திட முன்னேறிய திரு.டாக்டர்.ராஜசுந்தரம் அவர்களை அந்த இடத்திலேயே கொன்றது கொடூரர்களின் கூட்டம். மற்றவர்கள் அங்கிருந்த மேசை,நாற்காலி ஆகியவற்றை உடைத்து அதனை கொண்டு தங்களை தாக்க வந்தவர்களிம் இருந்து தப்பினார்கள்.

புல்லுமலை, பட்டியகோலா, ஒரு பசுமை படர்ந்த இயற்கையின் அற்புதமான பகுதி. அங்கு தமிழர்கள் நூற்றாண்டுகளுக்கு மேலாக வாழ்ந்து வந்தனர்.சிங்களர்களால் அழிக்கப்பட்ட அப்பகுதியின் இன்று அவற்றின் நினைவாக, சிதைக்கப்பட்ட கல்விசாலைகளும், கோவில்களும்,தேவாலயங்களும் வன்முறை காட்சிகளுக்கு சாட்சியாய் நிற்கின்றன.1983_முதல் 1990 _வரை ஏறத்தாழ 400 குடும்பங்கள் காணாமல் போயின.கணக்கிலடங்கா கற்ப்பழிப்பு சம்பவங்கள் நடந்தன.எந்தவொரு சர்வதேச அமைப்பும் காணாமல் போன அந்த 400 குடும்பங்களின் நிலை என்ன ஆயிற்று என்று இன்றுவரை கண்டு கொள்ளவில்லை.

வன்முறை தொடங்கிய ஐந்தாவது நாள், 28 _ஜுலை அன்று தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக ஒரு ஆறுதல் வார்த்தை கூட கூறவில்லை. நடத்தப்பட்ட கலவரங்களுக்கு பின் International Commissin of Jurists குழு அறிக்கை வெளியிட்டது.

பால் சிகார்ட் என்பவர் வெளியிட்ட அந்த அறிக்கையின் முக்கிய வரிகள் இங்கு ஆங்கிலத்திலேயே தரப்பட்டுள்ளது.

``In his address to the nation on the 5th day of rioting president did not see it fit to utter one single word of sympathy for the victims of the violence and destruction which he lamented. If his concern was to reestablish communal harmony in the Island whose national unity he was anxious to preserve by law that was a misjudgment of monumental proportions...

But what I find most extraordinary is that, to this day, there has been no attempt to find out the truth through an official, public and impartial enquiry, when the situation in the country cries out for nothing less.''

தமிழர் தன்னார்வு தொண்டு நிறுவனங்கள் நடத்திய கணக்கெடுப்பில் 200000 தமிழர்கள் வீடுகள் அற்ற அகதிகளாயினர் மற்றும் 3000 தமிழர்கள் கொல்லப்பட்டத்த தகவலையும் தந்தனர். நடத்தப்பட்ட அனைத்து வன்முறைகளும் அரசின் ஆதரவு பெற்ற சிங்கள குண்டர்களை கொண்டும் காவல்துறை,ராணுவ உதவியுடன் நடத்தப்பட்டன என்றும் இவை அனைட்தும் ஆளும் அரசாங்க உறுப்பினர்களின் ஆதரவோடும் நடந்தன என்றும் அரசு சார்பற்ற அனைத்து செய்திகளும் கூறின.
இந்த கலவரங்களை உலகிற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதற்காக இச்சம்பவங்களை நேரில் கண்டவர்கள் உதவியுடன் எழுதப்பட்ட நூல்களின் விபரங்கள் இதோ.
1. Sri Lanka: A Mounting Tragedy of Error by Paul Sieghart. Report of a mission to Sri Lanka in January 1984 on behalf of the International Commission of Jurists and its British section Justice, March 1984.

2. Detention, Torture and Murder - Sri Lanka by S A David (Survivor of the Prison Massacre).

3. Sri Lanka Hired Thugs by Amrit Wilson in New Statesman, 26 July 1983.

4. Race & Class Vol 26 No 4 1985

1983_ல் தீவு முழுதும் ஆயிரக்கணக்கில் பயங்கரங்கள் அரங்கேறின அவற்றில் பாதிக்கப் பட்டோர் லட்சக்கணக்கானோர் ஆவர். தன் குடும்பம் தன் கண்முன் அழிக்கப்பட்ட துன்பத்தை திரு.சூசைமுத்து தம்பிமுத்து விவரிக்கிறார்:

"1983_ல் இலங்கை ராணுவம் எங்கள் வீடுகளில் இருந்து விலையுர்ந்த பொருட்களை தங்கள் வாகனங்களில் ஏற்றி கொண்டபின் ஏறத்தாழ 45 வீடுகளுக்கு தீ வைத்தது.ஆயுதம் தாங்கியவர்களை எதிர்த்து எங்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை.உயிர்களை காப்பற்றிக் கொள்ள காய்கறி தோட்டம் நோக்கி அனைவரும் ஓடினர்.நாங்களும் காய்கறி தோட்டம் இருந்த முகில் மலை நோக்கி ஓடினோம்.இலங்கை ராணுவம் எங்களை விரட்டி சூழ்ந்தது, என்னுடைய தம்பி,செல்லதம்பி பேரின்பராசா மற்றும் அவர் கர்ப்பிணி மனைவியையும் இழுத்த ராணுவத்தார்,என் தம்பியின் கைகால்களை கட்டி வைத்து விட்டு அவர் கண் முன்னேயே அவரின் கர்ப்பிணி மனைவியை மாறி மாறி கற்பழித்தனர்.நிர்வாண நிலையில் இருந்த அப்பெண்ணின் வயிற்றை கத்தியால் கிழித்து வயிற்றிலிருந்து குழந்தையை எடுத்து தரையில் அடித்து கொன்றனர்.என் தம்பியை காதில் துப்பாக்கியை வெடிக்க வைத்து கொன்றனர்.பின் அவரின் உயிரற்ற உடலை இழுத்து கொல்லப்பட்ட அவர் மனைவியின் உடல் மீது "கணவனே மனைவியை கற்பழிப்பது" போன்ற நிலையில் கிடத்தி வைத்தனர். அதே வேளையில் எங்களுக்கு மிக அருகில்,யோகநாதன்,அவர் தந்தை ஆறுமுகம் மற்றும் ஜெகநாதன்,ராசய்யா ஆகியோர் சுடப்பட்டு இறந்தனர்,அவர்களின் மார்பு பகுதி கிழிக்கப்பட்டு இதயம் உட்பட்ட உறுப்புகளை வெளியே இழுத்து போட்டிருந்தனர் சிங்களர்கள்"
தொடரும்..,

May 8, 2007

ஈழத்தமிழர் படுகொலைகள் -பாகம் 1

சிங்கள இனவெறியர்களால் கடந்த அரை நூற்றாண்டுகளாய் நடத்தப்பட்டு வரும் இன படுகொலைகளை வரிசைப்படுத்த எவராலும் இயலாது।கணக்கிலடங்கா எண்ணிக்கையே அதற்கு காரணம். ஆயினும் எம்மால் இயன்ற வரையிலான படுகொலை நிகழ்வுகளை சேர்த்து உங்கள் பார்வைக்கு வைக்கின்றோம்.


1956 -
இன்கினியாலாவில் 150 தமிழர் படுகொலை:
1940-
களில், வேளான்மை துறை அமைச்சராக இருந்தவர்,பெரும்பாலான தமிழர்கள் வாழ்ந்த பகுதிகளில் வேண்டுமென்றே சிங்கள குடியேற்றங்களை ஏற்படுத்தினார்.குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில், கலோயா முன்னேற்ற திட்டம் என்ற பெயரிலும், திரிகோணமலை மாவட்டத்தில்,கண்டாலை மற்றும் ஆலை முன்னேற்ற திட்டம் என்ற பெயரிலும், சிங்கள குடியேற்றங்கள் நடந்தன. அவ்வாறு குடியேறியவர்களுக்கு பண உதவியும் தரப்பட்டது.அவர்கள் தமிழர்களை தாக்க தொடங்கினர்,அவர்களுக்கு (சிங்களர்களுக்கு)பாதுகாப்பாக போலீஸும் ராணுவமும் உதவின. அங்கு பௌத்த கோயில்கள் பெரிய மணிக்கூண்டு வைத்து கட்டப்பட்டன.இந்த மணிக்கூண்டு அடிக்கப் படும் போது அந்த சத்தம் எதுவரை கேட்கிறதோ அதுவரையிலான நிலங்கள் அனைத்தும் பௌத்த சிங்களர்களுக்கு சொந்தம் என்று காட்டுமிராண்டி சட்டத்தை அவர்களே உருவாக்கினார்கள்.இப்படி ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் தமிழர்களுக்கு சொந்தமானவை. 1956 ல் நடந்த பொது தேர்தலில் பண்டாரநாயகே வென்றவுடனே "சிங்களர் மட்டும்" என்ற சட்டத்தை பிறப்பித்தார்.அதை செய்வேன் என்று தேர்தல் அறிக்கை தந்ததாலே அவர் வெற்றி பெற்றார்.தமிழர்களுக்காக் இருந்த அரசியல் கட்சிகள் கூடி அமைதி முறையில் போராட முடிவெடுத்து 05/06/56 அன்று சத்தியாகிரக போராட்டத்தை கொழும்புவில் கடற்கரை நோக்கி அமைந்திருந்த பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் அருகில் தொடங்கினர்.
அனைத்து தமிழ் அரசியல் கட்சி தலைவர்களுடன்,உலக புகழ் பெற்ற தமிழ் ஆய்வாளரும்,தமிழ் புலமை பெற்றவருமான அருட் தந்தை.திரு.தனிநாயகம் அவர்களும் கலந்து கொண்டார்கள்.போராட்டம் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே சிங்கள வன்முறை கூட்டம் தாக்க ஆரம்பித்தது.கொழும்புவில் தமிழர்களின் வியாபார நிறுவனங்கள் குறிவைத்து சூரையாடப்பட்டன.இலங்கை தீவு முழுதும் வன்முறை மூண்டது. "அம்பாறை" மாவட்டத்தில் சமீபத்தில் குடியேற்றப்பட்ட சிங்களர்கள் தமிழர்களை கொல்லத் தொடங்கினர்.கரும்பு தோட்டத்திலும்,ஆலையிலும் பணி புரிந்த 150 தமிழர்கள் கொல்லப்பட்டனர். கரும்பு தோட்டங்கள் தீ வைக்கப்பட்டு அதில் கொல்லப்பட்ட தமிழர்களின் உடல்கள் மட்டுமின்றி காயப்பட்டவர்களும் உயிரோடும் தீயில் வீசப்பட்டனர்.

இதுவே இலங்கை தீவில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட முதல் பதிவு செய்யப்பட்ட படுகொலை சம்பவம் ஆகும்.இச்சம்பவத்தை "எமர்ஜென்ஸி 58" என்ற தன் நூலில் "டார்சி விட்டாச்சி" என்ற ஆசிரியர் "மாபாதக படுகொலை நிகழ்வு" என்று குறிப்பிட்டுள்ளார்.

1974 - தமிழ் ஆராய்ச்சி மாநாடு தாக்குதல் - 9 பேர் பலி.
யாழ்பாணத்தில், 1974 ஜனவரி 3-10 ல் தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடத்திட முடிவெடுக்கப்பட்டு அதற்கான ஆயத்த பணிகள் நடந்தன। இம்மாநாடு நடந்திட கூடாது என்று யாழ்பாண மேயர் அரசாங்கத்தின் உத்திரவுடன் நிறைய தடங்கல்கள் செய்தார்।பல்வேறு நாடுகளில் இருந்து வருகை புரிய பல தமிழ் அறிஞர்கள் "விசா" எனப்படும் அனுமதி வேண்டி விண்ணப்பித்திருந்தனர்.மாநாட்டை எவ்வகையிலாவது நிறுத்திட விரும்பிய அரசு, தீவு முழுதும் வாழும் தமிழர்களின் ஈடுபாட்டை துடிப்பை தடுத்திட வழியில்லை என்ற நிலையில் கடைசி கட்டத்திலேயே அனுமதி தந்தது.ஆயினும் வெளிநாட்டு தமிழறிஞர்களுக்கு மிக குறைந்த எண்ணிக்கையிலேயே அனுமதி தந்தது.
மாநாடு யாழ்பாணத்தில் நடப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்று கூறி மாநாட்டு அமைப்பின் தலைவர் திரு.தம்பைய்யா தன் பதவியை ராஜினாமா செய்தார்.அதன் பின்பு பேராசிரியர் திரு.வித்யாநந்தன் தலைமை பொறுப்பேற்க மாநாடு திட்டமிட்டப்படி
3 ம் தேதி தொடங்கியது.யாழ்பாணம் முழுதும் தமிழர்கள் விழாக்கோலம் பூண செய்திருந்தனர்.
உற்சாகமும்
,துடிப்புமாய் இதுவரை இலங்கை மண்ணில் இதுபோல் தமிழ் மாநாடு நடந்ததில்லை என்று நிருபித்தார்கள் தமிழர்கள்.
மாநாட்டின் கடைசி நாள் (10 ஜனவரி 1974) நிகழ்வாக தமிழ்நாட்டில்
இருந்து வருகை புரிந்திருந்த பேராசிரியர் திரு.நைனா முகமது அவர்கள் தமிழ்மொழியின் சிறப்பு பற்றியும் தமிழர் கலாசாரம் பற்றியும் உரையாற்றிக் கொண்டிருந்த போது, யாழ்பாண காவல்துறை இணை ஆய்வாளர் சந்திரசேகர என்ற கொடூர மனம் கொண்ட அதிகாரியின் தலைமையில் திடீரென நுழைந்த காவல் படை, மாநாட்டில் பங்கேற்க வந்தவர்களை தாக்க தொடங்கியதுடன் துப்பாக்கியால் சுடவும் ஆரம்பித்தனர். விழா மேடையை சிதைத்தனர்
, முடிவில் தங்கள் சிங்கள இனவெறிக்கு சாட்சியாய் 9 தமிழர்களை கொன்றதுடன் நூற்றுக்கும் மேற்ப்பட்டோரை படுகாயப்படுத்தினர்.

அவ்வாறு ஒரு கொடிய நிகழ்வை நடத்திய காவல்துறை இணை ஆய்வாளர் சந்திரசேகர_வை பாராட்டி பதவி உயர்வு கொடுத்தார் அந்நாட்டின் பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகே.

1977 - இனப் படுகொலை
1977 ஜுலை மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் United National Party (UNP) கட்சி 140 இடங்களை கைப்பற்றி பெரும் வெற்றி பெற்றது. ஆட்சியை இழந்த SLFP கட்சி வெறும் 8 இடங்களையே பெற்றது. தமிழர் பெரும் எண்ணிக்கையில் வாழும் இடங்களில் பல்வேறு தமிழ் கட்சிகள் 18 இடங்களை கைப்பற்றியது சிங்கள ஆதரவு கட்சிகளுக்கு பெரும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
அதன் விளைவாக யாழ்பாணத்தில் சிங்கள காவல்துறையினர்
, தமிழர் பயிலும் பள்ளிக்குள் நுழைந்து பாலியல் பலாத்காரங்களுக்கு தமிழ் சிறுமிகளை உட்படுத்தினர்.அதை எதிர்த்த தமிழர்களை ஆயுதம் தாங்கிய காவல்துறையினர் அச்சுறுத்தினர்.அதனை தொடர்ந்து யாழ்பாணம்-கொழும்பு இடையிலான பயணிகள் வேக ரயில் வண்டி அனுராதபுரம் ரயில் நிலைய நிறுத்தத்தில் வைத்து தாக்கப்பட்டது.
இத்தாக்குதலை தொடர்ந்து தீவு முழுதும் தமிழர்கள் தாக்கப்பட்டனர் குறிப்பாக
, திரிகோணமலை,வவுனியா,ரத்மலானா,பதுல்லா,கொழும்பு, நகர தமிழ் மக்கள் பெரிதும் பாதிப்படைந்தனர்.இக்கொடிய வன் தாக்குதல்களை கண்டித்து தமிழ் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒருமித்து குரல் எழுப்பினார்கள். ஆனால் பிரதமர் J.R.ஜெயவர்தனே நாட்டில் அமைதி நிலவுவதாகவும் தடை சட்டமோ,அவசர சட்டமோ கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என்றும் அத்தகைய சட்டத்துடன் நாட்டை ஆள்வதில் தமக்கு விருப்பம் இல்லை என்றும் கூறினார்.

இச்சம்பவத்தை விசாரிக்க அரசாங்கமே, சான்சோனி கமிஷன் அமைத்தது. 1977 ல் தொடங்கிய விசாரணை 1980 ல் அறிக்கையாக வெளியிடப்பட்டது. அவ்வறிக்கையில், 300 தமிழ் பொதுமக்கள் கொல்லப்பட்டார்கள் என்றும் ஆயிரத்திற்க்கும் அதிகமானோர் தாக்குதலுக்கு உள்ளாகினர் என்றும்,கத்தி,இரும்பு குழாய்கள்,மரக்கட்டைகள் கொண்டு இவர்கள் தாக்கப் பட்டுள்ளார்கள் என்றும் கூறியது. தன் அறிக்கையின் முடிவாய் கொல்லப்பட்டோர்க்கும்,தாக்கப்பட்டோர்க்கும் உரிய இழப்பு நிதி தரப்பட வேண்டும் என பரிந்துரை செய்தது.ஆனால் அவ்வாறு நிதி உதவி எதுவும் அரசாங்கத்தால் தரப்படவில்லை.

அரசாங்க சார்பற்ற நிறுவனங்கள் நடத்திய விசாரணையில் 1500 தமிழர்கள் கொல்லப்பட்டதாக அறிக்கை வெளியிடப்பட்டது.

1981 - இனக் கலவரம்
1981 பொதுத் தேர்தல் கூட்டத்தில் கலந்து கொள்ள இலங்கை அமைச்சர்களான காமினி திசநாயகே மற்றும் சிறில் மேத்யூ ஆகியோர் யாழ்பாணத்திற்க்கு வந்திருந்தனர்.அவர்களின் வருகைக்காக மிக பெரும் காவல் படையும் சிங்கள குண்டர் படையும் பாதுகாப்பு என்ற பெயரில் வந்திறங்கி அட்டூழியங்களை தொடங்கினர். அதன் விளைவாய் 31/05/81
அன்று
ஒரு சிங்கள காவல் துறை நபர் இறந்தார்.யாழ்பாணம் துரையப்பா மைதானத்தில் தங்கியிருந்த சிங்கள வெறியாளர்கள் உடனே விஸ்வரூபம் எடுக்க தொடங்கினர்.யாழ்பாணம் நாச்சியார் கோயிலுக்கு தீ வைத்து கொளுத்தினர்.
சிங்கள காவல் துறையினர் யாழ்பாணம் சந்தைக்குள் புகுந்து கடைகளுக்கு தீ வைத்தனர்.தமிழர்கள் வியாபாரம் செய்ய வைத்திருந்த சரக்குகள் அனைத்தும் தீக்கிரையாயின. தமிழ் கலாசார பிரதிபலிப்பாய் நிறுவப்பட்ட சிலைகள் வீழ்த்தப்பட்டன.
1974 _தமிழ் மாநாடு நிகழ்ச்சியில் கொல்லப்பட்டவர்களின் நினைவாக கட்டப்பட்டிருந்த நினைவாலயம் தகர்க்கப்பட்டது. வெறியர் கூட்டம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் விடுதிக்குள் புகுந்தது.நாடாளுமன்ற தமிழ் உறுப்பினர் திரு.யோகேஸ்வரன் இல்லத்தை தேடினர்.அவர்கள் தாக்க வரும் செய்தி அறிந்து அவர் தன் குடும்பத்தாருடன் பின் பக்க வாயில் வழியே வெளியேறி தப்பித்தார்.

ஜுன் 1981_ல் திரு.யோகேஸ்வரன் "இந்தியா டுடே" பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் தன் வீட்டை தீயிட்டவர்கள் சிங்களர்கள் தான் என்று கூறியுள்ளார்.

தொடரும்..,

May 3, 2007

தமிழீழ விடுதலைப் புலிகள் அறிக்கை

தமிழக மீனவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கும் 12 தமிழக உறவுகள் காணாமல் போனமைக்கும் எதுவித தொடர்பும் இல்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகள் உத்தியோகப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கை:

அரசியல்துறை,
தமிழீழ விடுதலைப் புலிகள்,
தமிழீழம்
30.04.2007

தமிழக மீனவர்கள் ஐந்து பேர் கடலில் வைத்துச் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பு இருப்பதாக வெளிவருகின்ற செய்திகள் முற்றிலும் உண்மைக்குப் புறம்பானவை என்பதை தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.

இவை தமிழ் மக்களுக்கும் அவர்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரான சக்திகளால் திட்டமிடப்பட்டு வெளிக்கொணரப்படும் கட்டுக்கதைகளே ஆகும்.

தமிழக மக்களுக்கும் எமது மக்களுக்கும் இடையிலான நல் உறவினைப் பிரித்து எமது மக்களைத் தனிமைப்படுத்தி அவர்களின் மீது மிகப்பெரும் மனிதப் பேரவலங்களை கட்டவிழ்த்து விட்டு இன அழிப்பொன்றை சிறிலங்கா அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது.

அதன் ஒரு பகுதியாகவே தமிழக மீனவர்களை அவ்வப்போது கடலில் வைத்துச் சுட்டுக்கொன்று விட்டு அதற்கான பழியை தமிழ் மக்கள் மீதும் விடுதலைப் புலிகள் மீதும் சுமத்தி விடுகின்ற வழமை தொடர்ந்து வருகின்றது.

இப்படியான குற்றச்சாட்டுக்களை காரணமாக வைத்து இந்திய அரசுடன் ஒரு கூட்டு கடல் ரோந்து நடவடிக்கையை தொடங்குவதற்கும் அதன்மூலம் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தினை நசுக்கிவிடலாம் என்றும் சிறிலங்கா அரசு கனவு காண்கிறது.

அதற்காகவே தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்களை தொடர்ந்து நடாத்தி வருகின்றது. இதன் மூலம் தமிழக உறவுகளை எமது மக்களிடமிருந்து அன்னியப்படுத்தி தனது இனப்படுகொலை முயற்சிகளை அவர்களுக்கு மறைத்து அரசியல் இலாபம் சம்பாதிக்க நினைக்கின்றது.

எமது மக்களும் அமைப்பினரும் எப்போதும் தமிழக உறவுகளுடன் ஒரு நல்ல உறவினைப் பேணி வருகின்றனர். அவர்களை அச்சுறுத்துவதற்கோ, அவர்களின் உயிர்களுக்கு ஊறுவிளைவிப்பதற்கோ நாம் ஒருபோதும் முயற்சிக்கவில்லை.

பதிலாக பல ஆபத்துக்களில் இருந்தும், சிறிலங்கா அரசின் வன்முறைகளில் இருந்தும் பல சந்தர்ப்பங்களில் அவர்களை காப்பாற்றி பத்திரமாக கரை சேர்த்திருக்கின்றோம். தமிழகத்திற்கு அனுப்பி வைத்திருக்கின்றோம்.

அப்படியிருந்தும் 300-க்கும் மேற்பட்ட தமிழக உறவுகள் சிங்களக் கடற்படையால் இதுவரையும் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்பது மிகவும் மனவேதனைக்குரியதே.

அந்த விதத்திலே அண்மையில் இடம்பெற்ற வன்முறையும் திட்டமிடப்பட்டு சிங்கள இராணுவத்தினராலேயே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றது. மேலும் அதற்கு விடுதலைப் புலிகள் தான் காரணம் என்ற பொய்யான பரப்புரையையும் அது முன்னெடுத்து வருகின்றது.

இவ் வன்முறையில் 12 தமிழக உறவுகள் காணாமற் போய்விட்டதாக கூறப்படுகின்றது. இவர்கள் குறித்த நிலவரங்களை அறிவதற்கு எமது கடற்படையினர் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர்.

எமது பிரதேசத்தில் இதுவரைக்கும் அப்படியானவர்கள் இருப்பது தொடர்பாக எந்தத் தகவல்களும் கிடைக்கவில்லை.

ஆயினும் எமது பிராந்தியத் தலைவர்களுடன் இது தொடர்பாக தொடர்பு கொண்டிருக்கின்றோம். மீனவர்கள் தொடர்பான தகவல்கள் கிடைத்தால் அவர்களை மீட்பதற்கான எந்த நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பதற்கு நாம் தயாராக இருக்கின்றோம்.

தமிழக காவல்துறையினர் பேச்சு நடத்தவில்லை

தமிழகக் காவல்துறை இது தொடர்பாக எமது அமைப்புடன் தொடர்புகொண்டதாகவும், பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாகவும் வெளிவருகின்ற செய்திகள் யாவுமே உண்மைக்குப் புறம்பானவையாகும். இதுவரையில் தமிழகக் காவல்துறைக்கும் எமது அமைப்புக்குமிடையில் உத்தியோகபூர்வமான எந்தத் தொடர்புகளும் ஏற்படுத்தப்படவில்லை என்பதனை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.

தமிழக மக்கள் மீது சிறிலங்கா அரசு முன்னெடுத்து வருகின்ற நீண்ட கால வன்முறையின் பின் புலத்தினை தமிழக மக்கள் நன்றாக அறிந்திருக்கிறார்கள்.

அத்துடன் எமது மக்களுக்கும் எமது விடுதலைப் போராட்டத்திற்குமாக அவர்கள் குரல் கொடுத்தும் வருகிறார்கள். இத்தகைய பின்னணியில் இவ்வாறான வன்முறைகளையும் இதற்குக் காரணமானவர்களையும் தமிழக உறவுகள் உண்மையாகவே இனங்காணுவார்கள் என்றே நம்புகின்றோம்.

தொடர்ந்தும் இத்தகைய வன்முறைகள் இடம்பெறாது தடுப்பதற்கு எமது மக்களும், அமைப்பினரும் பூரண ஆதரவினை வழங்கிநிற்பார்கள் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்"

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Apr 30, 2007

ஈழ ஆதரவு-எங்கள் முத்திரை மட்டுமல்ல "முகவரி"

ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக நடந்து வரும் பெரும் போரில் வெற்றி நோக்கி வீரப்போர் நடத்திக் கொண்டிருக்கும் "விடுதலை புலிகள்" அமைப்பிற்க்கு தமிழகத்தில் முன் எப்போதுமில்லாத வகையில் தற்பொழுது ஆதரவு அதிகரித்துள்ளது என்பது நிஜம்.
ஏனோ இந்த நிஜம் சில "சந்தர்ப்பவாதிகளால்" மறைக்க முயற்சிக்க படுகிறது. அதற்காக அவர்களால் பல காரியங்கள்,சதிகள் திரை மறைவில் தீட்டப் பட்டுள்ளன. அதிகாரம் தன் கையில் என்பதால் இந்த சந்தர்ப்பத்தை வைத்து தன் அரசியல் எதிரிகளை "விடுதலை புலிகள்" அமைப்பின் ஆதரவாளர்கள் என்று முத்திரை குத்தி, செய்யாத சதிகளை அவர்கள் செய்தார்கள் என்று பொய்க் குற்றம் சாற்றி சிறையில் அடைத்துவிட தி.மு.க. தலைவர் கருணாநிதி முயற்சிக்கிறார் என்பது நன்றாக தெரிய ஆரம்பித்து விட்டது.

தமிழக சட்டமன்றத்தில் கடந்த சில நாட்களாக சில காங்கிரஸ் உறுப்பினர்கள் தவறாமல் எழுப்பும் கேள்வி "விடுதலை புலிகளை ஆதரிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?" என்ற கேள்விதான்.
அதிலும் குறிப்பாக "வை।கோ. அவர்களை குறிப்பிட்டு அவரை சிறையில் அடைக்க வேண்டும்" என கேட்கிறார்கள். (கேட்க வைக்கப்படுகிறார்கள் என்பதே உண்மை) வை.கோ.அவர்களை சிறையில் அடைப்பதின் மூலம் தன் அரசியல் பழியையும் தீர்த்துக் கொள்ளலாம் காங்கிரஸையும் திருப்தி படுத்தி விடலாம் என்று தந்திர நரியாய் திட்டம் தீட்டிவிட்டார். அந்த திட்டத்தின் அடுத்தக் கட்டமாக வை.கோ.அவர்களின் கைது நடவடிக்கைகளை விரைவில் அரங்கேற்றுவார் என்பதை பெரும்பாலோர் அறிந்தே உள்ளனர்.

ஈழப் போருக்கு ஆதரவு தருவோருக்கு இதுவே பரிசு என்று மிரட்டும் அந்த "நல்ல உள்ளங்களுக்கு" இந்த இணையத்தளத்தின் மூலமாக சொல்லிக்கொள்கிறோம், விடுதலை புலிகளின் ஆதரவு என்பது வை.கோ.அவர்களின் தம்பிமார்களாகிய எங்கள் மீது குத்தப்பட்டுள்ள "முத்திரை" மட்டுமல்ல அதுதான் எங்களுக்கான "முகவரி". உங்கள்(கருணாநிதி) மிரட்டலுக்கு அஞ்ச நிங்கள் பெற்றெடுத்த பிள்ளைகளை போலோ, பேரனை போலோ கோழைகள் நாங்கள் அல்ல.

எதற்க்கும் எங்களை தயார் படுத்தியே எங்கள் தலைவர் வை.கோ. வைத்திருக்கிறார் என்பதை அறிவித்துக் கொள்கிறோம்.

ஈழப் பிரச்சினையும் இந்தியாவும்

இலங்கை பேரினவாத அரசினால் மீண்டும் தமிழ் மக்கள் வேட்டையாடத் தொடங்கப்பட்டிருக்கும் நிலையில் ஈழத்தமிழர் விஷயத்தில் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தடுமாற்ற பிதற்றல்களாலும் தமிழ் மக்களை ஏமாற்றும் மத்திய அரசுடனான கடித அரசியல் கண்கட்டி வித்தைகளாலும் தமிழக மக்களே வெறுப்படைந்து போயுள்ளனர்.

எப்போதுமில்லாதவாறு தற்போது விடுதலைப் புலிகளுக்கெதிராக தமிழக அரசு எடுத்து வரும் `தேவையற்ற' பாதுகாப்பு ஏற்பாடுகள், சோதனை கெடுபிடிகள், தேடுதல்கள் என்பவற்றால் தமிழகத்தில் யுத்தம் நடைபெறுவது போன்ற நிலையே இங்கு காணப்படுகின்றது.

இலங்கை கடற்படையினரால் தினமும் தமிழக மீனவர்கள் நடுக்கடலில் வைத்து கொல்லப்படுகிறார்கள். காலையில் மீன் பிடிக்கச் சென்றவர்கள் மாலையில் பிணமாக திரும்பி வருவதே தமிழக கடற்கரையோர கிராமங்களில் நிகழும் அன்றாட நிகழ்வுகளாகி விட்டன.

தமிழக மீனவரின் உயிரைப் பாதுகாக்க அவர்களின் ஜீவாதார பிரச்சினைக்கு ஒரு நிரந்தரத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியாத தமிழக அரசு, இலங்கை கடற்படையின் கொலை வெறித் தாக்குதலில் இருந்து தமது மீனவர்களை அவர்களின் உடைமைகளை பாதுகாக்க முடியாத `தமிழக அரசு' இலங்கை கட்டுநாயக்க விமானத்தளம் மீது புலிகள் விமானத் தாக்குதல் நடத்தி விட்டார்கள் என்பதற்காக தமிழக கரையோரப் பகுதிகளில் போர்க்கால நடவடிக்கைகளில் இறங்கியிருப்பது தமிழக மக்களையே வருத்தமடைய வைத்துள்ளது.

தமது மீனவர்களுக்கு பாதுகாப்பை வழங்க மறுக்கும் தமிழக அரசு இலங்கை அரசு மீதும் அதன் கடற்படையினர் மீதும் மென் போக்கை கடைப்பிடித்து வருகின்றது.

ஆனால், விடுதலைப்புலிகள் தமது எல்லைக்குள் வந்து விடக் கூடாது என்பதற்காக கடற்பாதுகாப்பை அதிகரித்துள்ளதுடன், விடுதலைப் புலிகளின் விமானத் தாக்குதலை எதிர்கொள்ளவென விமான எதிர்ப்பு பீரங்கிகளை பொருத்தி வைத்துக்கொண்டு வானத்தை அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

விடுதலைப் புலிகளால் தமது நாட்டுக்கு எந்த விதப் பிரச்சினையும் ஏற்படாது என்பதனை நன்கு தெரிந்து வைத்திருக்கும் தமிழக,மத்திய அரசுகள் யாரைத் திருப்திப்படுத்துவதற்காக இவ்வாறான போர்க்கால நடவடிக்கைகளில் ஈடுபடுகிறதென சாதாரண இந்திய தமிழனும் கேள்வி கேட்கத் தொடங்கியுள்ளான்.

இந்திய கடற்படையை தமது கடற்படையுடன் கூட்டுரோந்தில் ஈடுபட வைப்பதற்காக தமிழக மீனவர்களையே பலியெடுத்து இந்திய அரசை அடிபணிய வைக்க இலங்கை அரசு முயற்சிப்பது தமிழக, மத்திய அரசுகளுக்கு தெரிந்திருந்தும் அவர்கள் இது விடயத்தில் இலங்கையரசையும் அதன் கடற்படையையும் பாதுகாக்க முனைவது தமிழக மீனவர்களை மட்டுமன்றி தமிழக மக்களையே கொதிப்படைய வைத்துள்ளது.

இந்நிலையில், தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் தடுமாற்ற அறிக்கைகளும் நழுவிச் செல்லும் நரித்தனமும் அவரும் ஒரு சாதாரண அரசியல் வாதியாகி விட்டாரோ என்ற கவலையை ஈழத்தமிழர்களுக்கு மட்டுமன்றி தமிழககத்திலுள்ளவர்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது.

இலங்கை கடற்படையுடன் கூட்டுரோந்துக்கு இணங்கியுள்ளதாக ஊடகங்களுக்கு கருணாநிதி அளித்த பேட்டியை பார்த்து பலரும் அதிர்ச்சியடைந்தனர். கூட்டுரோந்து அவசியமென வலியுறுத்திய கருணாநிதி அதனை பகிரங்கமாகவும் ஊடகங்களுக்கு தெரிவித்தார். இதனை தமிழக ஊடகங்கள் அதிமுக்கியத்துவம் கொடுத்து பிரசுரித்து ஒளி, ஒலி பரப்பின.

ஆனால், இதன் பின்னர் தமிழகத்தில் கருணாநிதிக்கு ஏற்பட்ட எதிர்ப்பை அவரே எதிர்பார்க்கவில்லை. வைகோ., அ.தி.மு.க. தலைவி ஜெயலலிதா பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ், பழ.நெடுமாறன், திருமாளவன், விஜயகாந்த் என பல கட்சியினரும் கருணாநிதியின் அறிவிப்புக்கெதிராக போர்க் கொடி தூக்கிய போது தான் நிலைமையின் விபரீதத்தை உணர்ந்து கொண்ட கருணாநிதி அவசர அவசரமாக மறுநாள் எலியும் தவளையும் கதை கூறி இலங்கை ,இந்திய கடற்படையின் கூட்டுரோந்தில் தமக்கு இணக்கமில்லை எனத் தெரிவித்து தப்பித்துக் கொள்ள முயன்றார்.

ஆனாலும், முதலில் யாருடைய வற்புறுத்தலுக்காக இலங்கை -இந்திய கடற்படைக் கூட்டு ரோந்துக்கு இணக்கம் தெரிவித்தார் என்பதை அவர் வெளியிடவில்லை. அத்துடன், ஈழத்தமிழர் விஷயத்தில் தான் அக்கறை உள்ளவன் என்பதை காட்டிக் கொள்வதற்காக மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பி தமிழக மக்களையும் ஈழத்தமிழரையும் முட்டாள்களாக்கவும் கலைஞர் முயற்சிப்பது அவருடைய 50 வருட அரசியல் வரலாற்றில் விரும்பப்படாத பக்கங்களாகவே இருக்குமென்கின்றனர் சில மூத்த அரசியல்வாதிகள்.

தமிழக மீனவர் பிரச்சினைக்கும் ஈழத்தமிழர் பிரச்சினைக்கும் தீர்வு காண வேண்டுமென கலைஞர் உண்மையில் நினைத்தால் அது அவருக்கு மிகவும் சாதாரண விடயம். மத்திய அரசுக்கு கலைஞர் சிறு அழுத்தம் கொடுத்தாலே போதும் . அனைத்தும் நன்றாகவே நடக்கும். ஆனால், கலைஞர் ஏனோ இவ்விடயங்களில் நழுவிச் செல்லும் கொள்கையை வகுத்துக் கொண்டிருக்கின்றார்.

ஈழத்தமிழருக்கு ஆதரவாக தான் செயற்பட்டால் அது ஜெயலலிதாவுக்கு பிரசார ஆயுதமாக பயன்பட்டு விடுமோ என கலைஞர் அச்சப்படுகிறார்.

தமிழகத்தின் செய்திதாள்களை தற்போது அதிகளவு ஆக்கிரமித்திருப்பது இரும்புக் குண்டு கடத்தல் விவகாரமாகவேயுள்ளது. தினமும் இரும்புக் குண்டுகள் மீட்பு, சந்தேக நபர்கள் கைது என்ற செய்திகளே வெளிவந்து கொண்டிருக்கின்றன. இச்சம்பவங்களுடன் விடுதலைப் புலிகள் தொடர்பு படுத்தப்பட்டுள்ளனர். இரும்புக் குண்டுகளை கடத்தி புலிகள் வெடிகுண்டுகள் தயாரிப்பதாக கூறப்படுகின்றது.

இரும்புக் குண்டுகள் கடத்தலுடன் தம்மை தொடர்பு படுத்தியதை மறுத்துள்ள விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் `நாம் தற்போது இரும்புக் குண்டுகளில் வெடிபொருட்கள் தயாரிக்கும் நிலையை கடந்து எவ்வளவோ காலமாகிவிட்டது. தற்போது நவீன தொழில்நுட்ப யுகத்தில் நாம் இருப்பதால் எமக்கு இரும்புக்குண்டுகள் தேவையில்லையெனக் கூறியுள்ளதுடன் தம்மிடம் அளவுக்கதிகமாக ஆயுதங்கள், வெடிபொருட்கள் இருப்பதால் இரும்புக் குண்டுகளை கடத்த வேண்டிய தேவை தமக்கில்லையெனவும் தெரிவித்துள்ளார்.

உண்மையும் அதுதான். இந்த இரும்புக் குண்டு (போல்ஸ்) கடத்தல்களுடன் கொழும்பு நகர வாகன உதிரிப் பாக விற்பனை வியாபாரிகளே தொடர்புபட்டுள்ளதாக தெரியவருகிறது. சட்டத்திற்குட்பட்டு இந்த இரும்புக் குண்டுகளை கொண்டு வந்தால் அதிக வரி செலுத்த வேண்டுமென்பதால் கடல்வழியாக இவற்றை கடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தமிழகத்திலேயே பலருக்கும் தெரிந்திருந்தும் ஊடகங்கள் மட்டும் புலிகளுடன் தொடர்புபடுத்தி செய்திகளை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்துகின்றன.

இதற்கும் சில காரணங்களுண்டு. பரபரப்பான சம்பவங்களை மிகைப்படுத்தி ஊடகங்கள் வெளியிட்டு வருவதாலும் அந்த விடயங்களுடன் சம்பந்தப்பட்டால் பிரபலமாகிவிடலாமென நினைக்கும் சில பொலிஸ் அதிகாரிகளுமே இந்த இரும்புக் குண்டு கடத்தல்களுடன் விடுதலைப் புலிகளை தொடர்பு படுத்திவிட்டு தமது புகைப்படங்களையும் பெயர்களையும் செய்திதாள்களில் பார்த்து பெருமைப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். தாம் புலிகளுடன் சம்பந்தப்பட்டவர்களல்ல வியாபாரிகளென பிடிபட்டவர்கள் தெரிவித்தாலும் அதனை பொருட்படுத்தாது அவர்களுக்கு புலி முத்திரை குத்திவிட்டு செய்திதாள்களுக்கு, பெரிய கடத்தலை முறியடித்து புலிகளை கைது செய்துள்ளதாக பேட்டியளிக்கின்றனர்.

இவ்வாறே பல சம்பவங்கள் தேவையற்ற வகையில் புலிகளுடன் தொடர்பு படுத்தப்பட்டு வருவதால் தமிழகத்தில் புலிகள் பெருகிவிட்டார்களென்ற எண்ணம் சில ஈழத்தமிழர் விரோத கட்சிகளுக்கு ஏற்படுவதால் இதனை அவர்கள் தமது அரசியலுக்கு பிரசார ஆயுதமாக பாவிக்கின்றனர்.

புலிகளின் விமானத் தாக்குதலும் தமிழக மக்களின் உணர்வும்

கொழும்பு, கட்டுநாயக்காவிலுள்ள இலங்கை விமானப்படையின் தளம் மீது விடுதலைப் புலிகளின் இரு விமானங்கள் நடத்திய குண்டு வீச்சு தாக்குதல் ஈழத்தமிழர்களைப் போன்றே தமிழக மக்களிடமும் ஒரு எழுச்சியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.

26 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை இடம்பெற்ற விமானத் தாக்குதல் தொடர்பாக தமிழகத்தின் அன்றைய தின மாலைப் பத்திரிகைகளான தமிழ்முரசு, மாலைமலர், மாலைமுரசு உட்பட பல ஊடகங்கள் உணர்ச்சிகர தலைப்புகளுடன் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவரது விமான `பைலட்டுகள்' தாக்குதலுக்கு புறப்படும் விமானம் போன்ற படங்களுடன் முன் பக்கத்தில் பிரசுரித்திருந்ததுடன் இலங்கையரசின் ஆட்டம் இத்துடன் முடிந்தது என்பது போன்ற செய்திகளையும் வெளியிட்டிருந்தன.

அன்றைய தினம் அங்குள்ள பத்திரிகை விற்பனை நிலையங்களில் குறிப்பிட்ட பத்திரிகைகள் சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்ததாகவும் இவ்வாறு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தமது கடைகளில் பத்திரிகைகள் விற்பனையாகவில்லையெனவும் கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

இதைவிட செல்லிடப் பேசிகளூடாகவும் விமானத் தாக்குதல் தொடர்பான செய்திகளை பரிமாறி வாழ்த்துக்களை பலர் தெரிவித்துக் கொண்டதையும் அவதானிக்க முடிந்தது. பல அரசியல் தலைவர்கள் கூட இத்தாக்குதல் குறித்து பகிரங்க கருத்துக்களை வெளியிடாத போதும் தமக்கு நெருக்கமானவர்களிடம் புலிகளின் விமானப்படை தொடர்பாக மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இந்நிலையில் புலிகளின் விமானத் தாக்குதலையடுத்து தமிழக அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் தான் முதலமைச்சர் கருணாநிதி மீது பலதரப்பட்ட மக்களையும் விசனமடைய வைத்துள்ளன. இது குறித்து வெளிப்படையாகவே ஊடகங்களில் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.

தமிழ் நாட்டை பொறுத்தவரை ஈழத்தமிழருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் பெருகிவரும் ஆதரவைக் கண்டு அச்சமடையும் மத்திய அரசு முதலமைச்சர் கருணாநிதிக்கு கொடுத்து வரும் அழுத்தம் காரணமாகவே தற்போதைய பரபரப்பு நடவடிக்கைகள் அரங்கேற்றப்படுவதுடன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கைது செய்யப்படுவார்களென்ற அறிவிப்பும் வெளியாகியுள்ளது.

இந்தியாவுடன் நட்புறவை வளர்க்க புலிகள் பெரும் பிரயத்தனம் செய்து வரும் நிலையில் அதனைக் கெடுப்பதற்கென்றே பல சக்திகளும் பல ரூபங்களில் செயற்பட்டு வருகின்றன. இரும்புக் குண்டு கடத்தல், தமிழக மீனவர்களை புலிகளே சுட்டுக் கொல்கிறார்கள் என்ற பிரசுரம், தமிழகத்தில் வன்முறை அதிகரிப்பு போன்ற நாடகங்கள் இந்த சதியின் சில பகுதிகளேயாகும்.

இதேவேளை, இந்தியத் தமிழர்களையே இனவெறியுடன் தமது எதிரிகளாகப் பார்க்கும் மலையாள பெருச்சாளிகள் (உதாரணம்:சிவசங்கர் மேனன்) இந்தியப் பிரதமரின் ஆலோசகர்களாக, வெளியுறவு செயலர்களாக பாதுகாப்பு அமைச்சராக இருக்கும் வரை ஈழத்தமிழர் பிரச்சினையில் ஈழத்தமிழருக்கு சார்பான எந்த முடிவையும் இந்திய மத்திய அரசு எடுக்காதென தெரிவிக்கும் தமிழகத்தின் மூத்த அரசியல் வாதிகள், தமிழக அரசும் முதுகெலும்பில்லாது ண்டுங்கெட்டான் நிலையிலிருப்பது ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை துரதிர்ஷ்டவசமானது என்கின்றனர்.

அரசியல் வரலாற்றில் பொன்விழாவை கொண்டாடும் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி சாதாரண அரசியலுக்கு அப்பாற்பட்டு ஈழத்தமிழர் பிரச்சினையை அணுக வேண்டுமென்பதே அனைவரினதும் விருப்பமாகும்.

Apr 24, 2007

புலிக்கொடி ஏந்திய கனடா தமிழ் வீரன்

ஈழத் தமிழர் பிரச்சனையை அனைத்துலக சமூகத்துக்கு எடுத்துச் சொல்லும் நோக்கத்துடனேயே நான் மைதானத்தில் உள்நுழைந்தேன் என்று அனைத்துலக துடுப்பாட்ட மைதானத்தில் தமிழீழத் தேசியக் கொடி ஏந்தி பரபரப்பை ஏற்படுத்திய கனேடிய இளைஞரான மயூரன் தெரிவித்துள்ளார்.

தாயக மண்ணிலிருந்து நான்கரை வயதில் கனடிய நாட்டுக்கு நான் வந்தேன்.

பொதுவில் துடுப்பாட்டாப் போட்டிகளில் எனக்கு ஆர்வம் உண்டு. கனடாவில் நான் இருப்பதால் கூடைப்பந்தாட்டம் போன்ற போட்டிகளைத்தான் அதிகம் பார்ப்பதுண்டு. ஆனால் மேற்கிந்திய தீவுகளுக்கு துடுப்பெடுத்தாட்டப் போட்டிகளை பார்க்கச் சென்றது என்பது எம்முடைய பிரச்சினை எல்லோருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகத்தான்.

இப்போதுதான் முதல் முறையாக துடுப்பாட்டப் போட்டியைப் பார்க்கச் சென்றேன்.

எங்களுடைய மக்கள் எல்லோருக்கும் எங்கள் நாட்டில் நடைபெறுவது என்ன என்று தெரியும். அனைத்துலக மன்னிப்புச் சபையும் உலகக் கிண்ண துடுப்பாட்டப் போட்டியையொட்டி பரப்புரை மேற்கொண்டது. ஆனால் சிறிலங்கா அரசாங்கத்தின் முயற்சியால் அது தடுத்து நிறுத்தப்பட்டது.

ஆகையால் அனைத்துலக மன்னிப்புச் சபையின் பரப்புரைக்கு ஆதரவாகவும் எமது பிரச்சனையை அனைத்துலகத்துக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்றும் கருதி இந்த இளைஞராக இருப்பதால் நேரடி நடவடிக்கையை மேற்கொண்டேன்.

என்னுடைய நண்பர்களுடன் நான் மேற்கிந்தியத் தீவுகளுக்குச் சென்றேன்.

நாம் மேற்கொண்ட நடவடிக்கையானது முன்னரே திட்டமிட்டதுதான்.

அந்த மைதானத்தில் பல்வேறு நாடுகளின் கொடிகளெல்லாம் இருக்கின்றபோது எங்களுடைய நாட்டினது புலிக்கொடியும் அதாவது தமிழீழத் தேசியக் கொடியைக் கொண்டு போனால் என்ன மாதிரி விளைவை உண்டாக்கும்- பரபரப்பை ஏற்படுத்தும் என்று திட்டமிட்டுத்தான் இதனைச் செய்தோம்.

அவுஸ்திரேலியாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையேயான போட்டியைத் தெரிவு செய்யக் காரணம் உண்டு.

சிறிலங்காவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையே நெருக்கமான உறவு உண்டு. சிறிலங்காவின் அமைச்சரான கேகலிய ரம்புக்வெல, அவுஸ்திரேலியாவுக்குச் சென்று எங்கள் மக்களின் செயற்பாடுகளைத் தடுக்கப் பார்க்கிறார். எங்களுடைய போராட்டத்தைத் தடை செய்ய அவர் முயற்சித்து வருகிறார். ஆகையால்தான் தற்போது இந்தப் போட்டியை நாம் தெரிவு செய்தோம்.

எங்களுக்கு மைதானத்தின் எந்தப் பகுதியைத் தெரிவு செய்ய வேண்டும் என்று வெளியிலிருந்து தெரியவில்லை. மைதானத்தின் பகுதியில் நகரக்கூடிய இடங்களும் இருந்தன.

மைதானத்தைச் சுற்றி மிகவும் வலுவான பாதுகாப்பாகத்தான் இருந்தது. ஆனால் சரியான நேரத்தையும் சரியான இடத்தையும் நாம் தெரிவு செய்தமையால்தான் எமது திட்டம் வெற்றி பெற்றது.

மைதானத்தில் சிறிலங்கா அணி நிற்க அவுஸ்திரேலிய அணி மட்டையெடுத்து ஆடும்போதுதான் இறங்க வேண்டும் என்று திட்டமிட்டேன். அதன்படி நான் மைதானத்தில் இறங்கி பிட்ச் பகுதிக்குச் செல்ல தீர்மானித்தேன்.

ஆனால் மைதானத்தில் நின்றிருந்த சிறிலங்கா அணியினரோ அச்சத்துடன் இருந்தனர். அந்தப் பாதிப்பைவிட வந்திருக்கும் பார்வையாளர்களுக்கு விடயத்தைக் கொண்டு செல்ல வேண்டும் என்று கருதினேன். அதற்கேற்ப பார்வையாளர்களும் என்னை உற்சாகப்படுத்தினர். பார்வையாளர்கள் வரிசையில் இலங்கையர்களும் இருந்திருக்கக் கூடும். ஆனால் எந்தப் பகுதியிலிருந்து உற்சாகமளித்தனர் என்பது எனக்குத் தெரியவில்லை.

நான் மைதானத்தில் இறங்கும் வரை திட்டமிட்டதனை சரியாக முடிக்க வேண்டும் என்று கருதிக் கொண்டிருந்தேன். மைதானத்தில் இறங்கிய பின்னர் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தேன்.

சிறிலங்கா அணியினர் அச்சத்துடனும் அவமானப்பட்ட நிலையிலுமாக அவர்கள் முகம் இருந்ததை நான் சரியாகப் பார்த்தேன்.

நான் மைதானத்தில் தமிழீழத் தேசியக் கொடியுடன் இறங்கிய உடனே அங்கிருந்த காவல்துறையினர் என் பின்னால் வந்தனர். அவர்கள் என்னை நோக்கி வந்தபோது அவர்களுக்கு ஒத்துழைப்புத் தரும் விதத்தில் நான் எனது கையை உயர்த்தினேன்.

இதனை நான் விளையாட்டுக்குச் செய்யவில்லை. பரப்புரைக்காகத்தான் செய்கிறேன் என்பதனை அனைத்துலக துடுப்பாட்டச் சபையினரும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்களுக்கு இடையூறு செய்யவில்லை என்பதை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்காகத்தான் நாம் அவர்களோடு ஒத்துழைத்தேன்.

நான் செய்தது ஒரு போராட்ட ரீதியான செயல்தான். விளையாட்டுக்காக பிழையாக நான் செயற்படவில்லை.

நான் மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டபோது, முதலில் அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன். எங்கள் நாட்டில் இப்படியான பிரச்சினைகள் நடைபெறுகின்றன. அதனை வெளிப்படுத்தவே இத்தகைய செயற்பாடு மேற்கொண்டோம் என்றும் விளக்கம் அளித்தேன்.

மைதானத்திலிருந்த போதுதான் அனைத்துலக துடுப்பாட்டச் சபையினர் விசாரித்தனர்.

எந்த ஒரு பார்வையாளரும் மைதானத்தில் இறங்கக் கூடாது என்பதுதான் அந்த அதிகாரிகளின் சட்டம். என்னிடம் விசாரணை செய்த ஒவ்வொரு உயர் அதிகாரியிடமும் என்னுடைய மன்னிப்பைக் கூறி அத்துடன் எமது அரசியல் பிரச்சினையையும் நான் விளங்கப்படுத்தினேன். எதற்காக இந்தச் செயலை செய்தேன் என்றும் விளக்கினேன்.

மைதானத்திலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு அங்கிருந்து புலனாய்வுத்துறை தலைமை அலுவலகத்துக்குக் கொண்டு சென்றனர்.

முதலில் என்னை குற்றவாளியாகக் கருதித்தான் 40 அல்லது 50 பேர் கொண்ட புலனாய்வுப் பிரிவினர் விசாரித்தனர். என் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளத்தான் அவர்கள் முயற்சித்தனர்.

ஆனால் ஒவ்வொரு அதிகாரியும் என்னிடம் விசாரித்த போதும் விளக்கம் கூறினேன். அதன் பின்னர் எனது சார்பில் கதைக்கத் தொடங்கினர்.

அதன்பின்னர் அந்த நாட்டிலிருந்து வெளியேறுமாறு என்னைக் கேட்டுக் கொண்டனர். ஏனெனில் இன்னொரு போட்டிக்கு நான் திரும்பவும் போய் இப்படியான ஒரு சம்பவம் நடப்பதை அவர்கள் விரும்பவில்லை. அப்படி நடப்பதன் மூலமாக வெளிநாட்டினருக்கு மேற்கிந்திய தீவுகள் குறித்து பிழையான அபிப்பிராயம் வருமென கருதினர். ஆகையால் அதனை ஏற்று அந்நாட்டிலிருந்து வெளியேற இணங்கினேன்.

மேற்கிந்திய தீவுகள் நாட்டின் காவல்துறையினரின் பாதுகாப்புடன் அங்கிருந்து வெளியேறினேன்.

கனடா நாட்டுக்கு நான் திரும்பியபோதும் இதுவரை எதுவித விசாரணைகளும் மேற்கொள்ளப்படவில்லை. விசாரணைகள் வரலாம். அதனை எதிர்கொள்ளவும் நான் தயாராக உள்ளேன்.

ஆனால் கனடா நாட்டினது சட்டத்தை நாம் சரியான முறையில் கையாண்டால் எங்களுக்கு எதுவித பிரச்சனையும் வராது என்ற நம்பிக்கையுடன்தான் நான் மைதானத்திற்குச் சென்றேன்.

நான் மேற்கொண்ட நடவடிக்கையானது ஊடகங்களில் படங்களுடன் வெளியானதன் மூலம் எனது நோக்கம் நடந்தேறியிருப்பதால் மிகவும் உற்சாகமடைந்திருக்கிறேன். எமக்கு மட்டுமல்ல தமிழீழத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உள்ள அனைத்து இளைஞர்களுக்கும் உற்சாகத்தைக் கொடுக்கும் என்று கருதுகிறேன்.

நான் மேற்கொண்ட செயற்பாடு சரியானது என்று இளைஞர்கள் பலரும் தொடர்பு கொண்டு தெரிவித்ததோடு தங்களை அழைத்துச் செல்லாதது குறித்து கோபமடைந்தும் உள்ளனர்.

நாம் வெற்றி கிடைக்கும்வரை சிந்திக்க வேண்டும். நாங்கள் பெருந்தொகையில் திரண்டு போராட்டம் நடத்திய போதும் அனைத்துலகத்தின் கவனத்தை ஈர்க்கவில்லை. இத்தகைய புதிய வடிவங்களினூடே தொடர்ச்சியாக எமது செயற்பாடுகளை மேற்கொள்வோம்.

எங்களுடைய தேசியத் தலைவரின் விருப்பத்தின்படி அதாவது எமது தேசியத் தலைவர் அவர்கள் ஒருமுறை, வெளிநாட்டில் இருக்கும் தமிழ் இளைஞர்கள் அடுத்த கட்டப் போராட்டத்துக்கு முன்வர வேண்டும் என்று கூறியிருந்தார். நாங்கள் பீனிக்ஸ் பறவை போல் எழும்ப வேண்டும் என்றும் கூறினார்.

அதற்கேற்ப செயற்திட்டங்களையும் வடிவங்களையும் மாற்றி அனைத்து தமிழ் இளைஞர்களும் முன்வந்தால் நம் பிர்சினைக்கு விரைவில் நாம் தீர்வு காண்போம் என்றார் மயூரன்.

"தமிழ்நாதம் இணையதளத்திற்க்கு மயூரன் வழங்கிய நேர்காணல்"