தமிழரின் பிரச்சனைக்கு ஓரே தீர்வு தமிழீழமே இதன் மூலமே இலங்கைத் தமிழ் மக்களின் அபிலாசைகள் நிறைவேற்றப்படும் என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாகவுள்ளேன் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இந்தியாவைத் தவிர ஏனைய சர்வதேச நாடுகள் பல ஆயுதப் போராட்டங்கள் மூலமே விடுதலையைப் பெற்றுள்ளன. கியூபா மற்றும் வியட்ணாம் போன்ற நாடுகள் இவ்வாறே ஆயுதப் போராட்டங்கள் மூலம் தமது விடுதலையைப் பெற்றுள்ளன.
நான் சமாதான விரும்பியாக உள்ளபோதும் இலங்கையில் தமிழ் மக்களை கொலை செய்யப்படுவதிலிருந்து தடுப்பதற்கு தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆயுதப் போராட்டத்தை தவிர மாற்று வழியில்லை நான்முழுமையாகவே சமாதான மூலம் தீர்வை அடைய விரும்புகின்றேன் ஆனால் இலங்கைத் தமிழர்கள் விடயத்தை மறந்துவிட முடியாது இலங்கையில் இடம்பெறும் அப்பாவி மக்களின் படுகொலைகள் அரச தரப்பினாலேயே மேற்கொள்ளப்படுகின்றன.
அப்பாவிப் பொதுமக்களைப் பாதுகாக்கும் நோக்கிலேயே தமிழீழ விடுதலைப்புலிகள் ஆயுதம் ஏந்தியுள்ளனர். எனத் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத் செயலாளர் வைகோ மேலும் தெரிவித்துள்ளார் என்றார் அவர்.
No comments:
Post a Comment