Dec 6, 2006

திரு.ரவிசங்கர்ஜி அவர்களுக்கு நன்றி

ருத்துக்கள் எவரிடமிருந்து வருகிறது என்பதை காட்டிலும் அக்கருத்துக்களின் சாரம்சம் சரியானதாக இருக்கிறதா என்பதே முக்கியம்.

அந்த வகையில் இக்கட்டுரையாளனான நான் "பெரியாரிஸ" கொள்கையை விரும்புபவன் என்கிற போதிலும் மேற்ச்சொன்ன கருத்தின் அடிப்படையில் ஆன்மீக வாதியான திரு.ரவிசங்கர்ஜீ அவர்களின் கருத்துக்களை வெளியிட கடமைப்பட்டிருக்கிறேன்.

ஆன்மீகவாதிகள் அரசியலில் ஈடுபடலாமா? என்கிற சர்ச்சை நெடுங்காலமாய் உள்ளது. ஆனால், திரு.ரவிசங்கர்ஜி அவர்களின் கருத்துக்கள் அரசியலுக்கு அப்பாற்பட்டு மனித நேயத்துடன் கூறிய கருத்தாகவே அனைவராலும் கவனிக்கப்பட வேண்டும்.

சமிபத்தில், வாழும் கலை இயக்கம் சார்பில் ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் திரு.திரு.ரவிசங்கர்ஜீ அவர்கள் பொதுமக்களுக்கு பதிலளித்தார்.

கேள்வி: இலங்கை பிரச்னையில் இந்தியாவின் நிலை பற்றி உங்கள் கருத்து?

பதில்: ""இலங்கை பிரச்னையில் இந்தியா தலையிடாமல் விட்டுவிட்டது.உலகத்தில் உள்ள உயிர்கள் அனைத்தும் ஒன்று.உலகத்தில் மக்கள் எங்கு துன்பப்பட்டாலும் நாம் அதில் பங்கிட வேண்டும்.ஈராக் நாட்டில் நடக்கும் போரில் ஏழு லட்சம் பெண்கள் கணவனை இழந்துள்ளனர். நம் நாடு இலங்கை பிரச்னையில் தலையிட்டு இருந்தால் எவ்வளவோ பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டு இருக்கும்.ஆனால் இந்த பிரசினையில் இந்திய நாடு தலையிடாமல் மவுனமாக உள்ளது.''

"கார்க்கில் போரில் நம் துடிப்பான 2000 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.அதை செய்த பாகிஸ்தான் அதிபர் முஷாரப்புக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளித்து பேசுவது போல் இலங்கை தமிழர் பிரச்சினையிலும் இந்தியா தலையிட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

பல பெண்களின் கற்பை பறித்த "பிரேமானந்தா" அரசியல தரகனாய் இருந்து ஊழல் பல புரிந்த "சந்திரா சாமி", சங்கர மடத்தின் புனிதம் கெடுத்த "ஜெயந்திரர்","விஜயேந்திரர்" என்று வாரி சுருட்டும் புரட்டு சாமியார்களை கண்ட நமக்கு, திரு.ரவிசங்கர்ஜீ அவர்களை போன்று ஆன்மீக வளர்ச்சியோடு நம் பொது பிரச்சினையிலும் ஈடுபாடு கொண்டு கருத்து தெரிவிப்பவர்கள் ஆச்சரியத்தையும் மாற்றத்தையும் தர கூடியவர்கள் என்பதை மறுப்பதற்க்கில்லை.

நியாமான கருத்துக்களை துணிச்சலுடன் கூறிய திரு.ரவிசங்கர்ஜி அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி.


No comments: