பக்கத்து வீடு பற்றியெறிந்தால் நமக்கென்ன போச்சு என்ற மனநிலை இன்று நம்மிள் பலருக்கு பரவ தொடங்கி இருப்பது, நம் பண்பாடுகளை,உறவுகளை,மொழியின் அடையாளத்தை, இனத்தின் வளர்ச்சியை அழிக்க அடிக்கோலிடும் செயலாகும்.
பொழுதுபோக்கிற்க்கென ஒதுக்கப்படும் நேரத்தில் பத்தில் ஒரு முறை நேரத்தை கூட மேலே சொன்ன சிலவற்றை பற்றி சிந்திக்க நாம் ஒதுக்குகிறோமா என்றால் இல்லை என்பதே பெரும்பாலோரின் பதிலாய் அமையும்.
விஞ்ஞானத்தின் எல்லா வளர்ச்சியிலும் தமிழன் தன் முத்திரையை பதித்து விட்டான்,அவன் மூளைக்கு விஞ்ஞானம்,மருத்துவம்,கல்வி,என எட்டாத எதுவுமில்லை.
ஆனால் தன் மொழி,இனம் பற்றிய சிந்தனைகளில் தமிழன் ஏனோ சில காலமாய் பின் தங்கி உள்ளான் என்பதே உண்மை. ஈழத்தில் தமிழினம் இன்னும் விடியலை,விடுதலையை பெற முடியாமற் போராட்டம் தொடர்வதே அதற்கு மிகப் பெரிய சான்றாய் உள்ளது.
மாண்டு கொண்டிருக்கும் நம் சகோதர, சகோதரிகளுக்கு பிஞ்சு குழந்தைகளுக்காக நாம் என்ன செய்தோம்? என்ன செய்ய வேண்டும்?
இனத்தின் விடுதலைக்காக நாம் வாளேந்த ஒன்றும் தேவையில்லை."ஈழத்து தமிழன் வீரத்துக்கு பஞ்சம் ஒனறுமில்லை" எனவே அவர்கள் நம்மை களத்திற்க்கு அழைப்பார்களோ என அஞ்ச தேவையுமில்லை.
பின், நாம் என்னதான் செய்ய வேண்டும்?
வரலாற்றின் பக்கங்களை புரட்டி பார்த்தால் ஈழத்தமிழனின் வாழ்வுரிமை புலப்படும்.அவன் உரிமையை உலகுக்கு உணர்த்த வேண்டும்.ஈழம் பற்றி தவறான எண்ணம் கொண்டோரை முதலில் மாற்ற வேண்டும்.
நாம் உலகின் மிக பெரிய ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்பதற்க்கு ஒரு இந்தியனாய் பெருமை படலாம், அதே வேளையில் இந்திய நாட்டின் ஒர் பேரினமான தமிழினம் நம் கண்முன்னே அழிக்க பட்டுக்கொண்டிருப்பது ஒரு வெட்ககரமான செயலாகும்.
அரசாங்கம் எல்லாவற்றையும் செய்யும் என்றிருப்பது சரியல்ல.
மக்கள் தான் அரசாங்கம்,மக்களின் கருத்தைதான் அரசாங்கம் செயல்படுத்தும். ஜனநாயக முறையில் நம் ஆதரவை வெளிப்படுத்துவது தவறாகாது. எனவே ஈழத்திற்க்காக குரல் தருவீர்.அணி திரள்வீர்.
தமிழின அழித்தொழிப்பு பணியில் இறங்கி கொண்டே மறுபுறத்தில் தன்னை நல்லவனை போல் வேஷமிட்டு காட்டும் "சிங்கள" இனவாதிகளை நம்ப வேண்டாம். நாம் நல்லவர் என்பதால் நம் எதிரிகளும் நல்லவர்களாய் இருப்பர் என்று நினைப்பது தவறாகும்.
மானின் பார்வையில் சிங்கம்,தவளையின் பார்வையில் பாம்பு,குஞ்சு பறவையின் பார்வையில் வல்லூறு, நல்லவைகளாய் தெரிந்தால்,அப்பார்வையே அவற்றின் அழிவுக்கு வழி வகுக்கும்.
உணர்ச்சி கவிஞரின் வரிகள் இதற்கு எத்தனை பொருத்தமாய் அமைகிறது பாருங்கள்.
எத்தனை பெரிய மனம் உனக்கு?
எத்தனை பெரிய மனம் உனக்கு தமிழா!
எத்தனை பெரிய மனம் உனக்கு
எல்லோரும் மனிதரே என்பது உன் கணக்கு
ஏறி மிதித்தாலும் அவன் மனிதன்!
- உன்னை எட்டி உதைத்தாலும் அவன் மனிதன்!
காறி உமிழ்ந்தாலும் அவன் மனிதன்!
- உன் கதையை முடித்தாலும் அவன் மனிதன்!
அடக்கி ஆண்டாலும் அவன் மனிதன்! - உன்னை
அடிமை கொண்டாலும் அவன் மனிதன்!
ஒடக்கி வதைத்தாலும் அவன் மனிதன் - உன்
உரிமை பறித்தாலும் அவன் மனிதன்!
தாக்க வந்தாலும் அவன் மனிதன் - உன்
தமிழைக் தடுத்தாலும் அவன் மனிதன்!
ஏய்க்க வந்தாலும் அவன் மனிதன் - தமிழ்
இனத்தை அழித்தாலும் அவன் மனிதன்!