Jan 29, 2009

விழும் முன் விழைவோம்..,

ஈழத்தில் தமிழினம் அழிக்கப்பட்டு கொண்டிருக்கிறது என்பதை விட வேட்டையாடப்பட்டு கொண்டிருக்கிறது என்பதே உண்மை. இக்கட்டான இவ்வேளையில் தமிழன் என்கிற உணர்வுகளுக்கு மேலாக மனிதம் என்கிற உணர்வினை முன்வைத்து உங்களுக்கு இந்த வேண்டுகோளை நான் இங்கே வைக்கிறேன்.

நமக்கான கடமைகள் என்பது நம் குடும்பத்தை பராமரிப்பதும் தன் பெற்றோர் குழந்தைகளை பேணுவதும் என்பதோடு மட்டும் அதன் எல்லைகளை நாம் சுருக்கி கொள்ள கூடாது. அதற்கும் மேலாக ஒவ்வொருவருக்கும் சில பல கடமைகள் இருக்குமென்பதில் ஐயமில்லை. அவ்வாறான சில பலவற்றுள் என்னுடைய இந்த வேண்டுகோளையும் வைத்து இக்கடமையை செய்யுமாறு கேட்டு கொள்கிறேன்.

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வந்த தமிழீழ மக்கள் ராணுவத்தின் தாக்குதல்களுக்கு அஞ்சி தங்கள் குழந்தைகள் மற்றும் முதியோர்களுடன் காடுகளை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள். ராணுவம் கைப்பற்றும் பிரதேசங்களின் எண்ணிக்கை அதிகரித்தாலும் கூட அப்பிரதேசங்கள் மயான பிரதேசங்களாகவே காட்சியளிக்கின்றன.காரணம் அப்பகுதியில் வாழ்ந்த தமிழீழ மக்கள் அவ்விடங்களை விட்டு இடம் பெயர்ந்து தங்களுக்காக போராடும் விடுதலை புலிகள் அமைப்பினருடனேயே சென்று விடுகின்றனர்.

உதாரணமாக சமீபத்தில் சிங்கள ராணுவம் கைப்பற்றிய கிளிநொச்சி நகரின் ஒட்டு மொத்த மக்களும் ராணுவம் கைப்பற்றிய வேளையில் அந்நகரை காலி செய்து விட்டிருந்தனர் என்பதை சர்வதேச ஊடகங்களும் செய்திகளும் படம்பிடித்து காட்டியுள்ளன. இதற்கு காரணம் தமிழீழ மக்கள் ராணுவத்தின் கட்டுபாட்டில் வாழ அஞ்சுகிறார்கள் என்பதே ஆகும். மாறாக அவர்கள் தங்களுக்காக விடுதலை போரை நடத்தும் அமைப்பினரை நம்புகிறார்கள் அதனால் அவர்களை ஒற்றி தங்கள் நகர்வுகளை அமைக்கிறார்கள். ஏனென்றால் சிங்கள ராணுவத்தி னர், தான் கைப்பற்றிய பிரதேசங்களில் வாழும் தமிழர்கள் அனைவரையும் சித்திரவதை செய்து கொன்று போடுவதை தொழிலாக கொண்டிருக்கிறார்கள். தமிழர்களையே வெறுக்கும் சிங்கள ராணுவம் எப்படி புலிகளின் கட்டுபாட்டில் வசித்த தமிழர்களை நிம்மதியாய் வாழ விடுவார்கள்? விசாரணை என்ற பெயரில் சித்திரவதையும் தமிழ் பெண்களின் கற்பழிப்புகளையும் தான் சிங்கள ராணுவம் செய்யும்.

சென்ற மாத கடைசியில் கொழும்பு நகரின் வீதியில் குண்டுகளில் தங்கள் உயிரை முடித்து கொண்ட இரண்டு தமிழ் பெண்களின் சிதைந்த உடல்களை சிங்கள இளைஞர்கள் சிலர் கூடி செய்த அட்டூழியங்கள் உங்களுக்கு தெரியுமா? நம்மால் நினைத்து பார்க்க முடியாத அவல செயல் அது. ஆம், உயிரற்ற அந்த பெண்களின் உடலை நிர்வாணப்படுத்தி அந்த உடல்களுடன் சிங்கள இளைஞர்கள் மாறி மாறி உடலுறவு கொண்டதும் அதை சிலர் சுற்றி நின்று வேடிக்கை பார்த்ததையும் இன்னொரு சிங்கள இளைஞன் தன்னுடைய கைபேசி கேமராவில் படம்பிடித்து அதை பின்பு வெளியிட்டு தங்களின் இன வெறியின் உச்சக்கட்டத்தை இந்த உலகிற்கு படம் பிடித்து காட்டியுள்ளனர்.

இப்படிப்பட்ட மனநிலையில் உள்ள சிங்களனும் அவர்களின் ராணுவமும் இப்போது விடுதலை புலிகளை ஒழிக்கிறேன் என்கிற பெயரில் அப்பாவி தமிழர்களையும் கொன்று போட்டு வரும் செயலை துரிதப் படுத்திவருகிறார்கள். ஏறத்தாழ ஆறு லட்சம் தமிழர்கள் இப்போது விடுதலை புலிகளுடன் சங்கமமாகி இடம்பெயர்ந்துள்ள சூழ்நிலையில் ராணுவத்தின் ஒட்டு மொத்த தாக்குதலும் இந்த ஆறு லட்சம் மக்களையும் சேர்த்தே அமைய போகிறது. இனி அங்கு விழும் ஒவ்வொரு தாக்குதலும் தனி நபர் தாக்குதலாக அமைய போவதில்லை ஒட்டு மொத்த தமிழினத்தின் மீதான தாக்குதலாகவே அமைய போகிறது.

எனவே தமிழர்களாகிய நாம், ஈழத்தமிழர்களுக்காக எவ்வித தியாகமும் செய்ய வேண்டிய அவசியமில்லை ஆனால் "ஓர் இனம்" என்கிற உணர்வில் சிறு துறும்பையாவது அவர்களுக்காக நாம் கிள்ளி வீச வேண்டியது அவசியமாகிறது.

அது எவ்வகையான உதவியாகவும் இருக்கலாம், உங்கள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் என்று எல்லா தரப்பினரும் ஈழத்தின் நிலையினை உணர்ந்திடும் வகையில் அவர்களின் கவனத்தை மெதுவாக நாம் திருப்பிட வேண்டும். குறைந்தப்பட்சம் "மனிதம்" மாள்கிறதே என்கிற உணர்வை அவர்களின் மனதில் விதைத்திட வேண்டும். தமிழ்நாட்டு வாழ் தமிழாயின் வருகின்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒட்டளிப்பதை தவிர்க்க வேண்டும் அக்கட்சிக்கு வாக்களிக்க வேண்டாம் என்ற பிரச்சாரத்தையும் செய்ய வேண்டும். கனவுகள் கலையலாம் ஆனால் "தமிழீழம்" என்பது "லட்சியகனவு" பிரபஞ்சத்தின் கடைசி தமிழன் உள்ளவரை இந்த "லட்சியகனவு" கலைய வாய்ப்பில்லை. அதே வேலையில் இந்த "லட்சியகனவு" மெய்ப்பட ஒவ்வொரு தமிழனும் தமக்கான கடமையை தவறாது செய்திட வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.


Jan 28, 2009

கத்தியின்றி…… ரத்தமின்றி…… வெட்கமின்றி……

காங்கிரஸ் ஏற்பட்டபிறகுதான் மக்களுக்குத் தேசத்துரோகம் செய்து வாழ வேண்டிய அவசியமே ஏற்பட்டது. இப்போது மக்கள் ஒவ்வொருவரும் வாழ வேண்டுமானாலும்…… சிறப்பாக அயோக்கியர்கள் வாழ வேண்டுமானாலும்…… உத்தியோகங்களை விட காங்கிரசுதான் தக்க இடமாக இருந்து வருகிறது. -தந்தை பெரியார் – 1927.

ஊருக்கு மூணே பேர் இருந்தாலும் இந்தக் காங்கிரஸ் அலப்பரைக்கு மட்டும் அளவே இல்லாமல் போய்க் கொண்டிருக்கிறது. காகிதப்பஞ்சமே வந்துவிடக் கூடிய அளவிற்கு அறிக்கைப் "போர்" நடத்திக் கொண்டிருக்கிறார்கள் அதன் சர்வ கோஷ்டித் தலைவர்களும். சீமான் கொளத்தூர் மணி மணியரசன் கைது…… விடுதலைச் சிறுத்தைகள் பேனர் கிழிப்பு…… சத்தியமூர்த்தி பவனில் செருப்படி…… சிபிசிஐடி விசாரணை…… என அல்லோலப் பட்டுக் கொண்டிருக்கிறது தமிழகம். ஆனால் சத்தியமூர்த்தி பவனைப் பொறுத்தவரையில் இந்த முறை மட்டும் ஒரே ஒரு வித்தியாசம்தான். இதுவரைக்கும் தங்களது சொந்தக் கட்சியின் தலைவர்களையே வேட்டியை உருவி ஓடவிடுவது…… தங்களது தலைவர்களின் கொடும்பாவிகளை தாங்களே கொளுத்துவது…… சரமாரியாய் செருப்பாலடித்து "முதல்" "மரியாதையை" அளிப்பது என்பதெல்லாம் தங்களுக்கே உரித்தான பிறப்புரிமை என்றிருந்தவர்களுக்கு மற்றவர்கள் இதில் பங்குக்கு வந்தால் கோபம் வராமல் என்ன செய்யும்?

ஆனால் காவிரியில் கர்நாடகம் நீர் விட மறுக்கும்போதோ…… தலித்துகளுக்கோ, பிற்படுத்தப்பட்டோருக்கோ சமூகநீதி மறுக்கப்படும்போதோ…… தங்களது சகல துவாரங்களையும் பொத்திக் கொண்டிருக்கிற இந்தப் பேரா(சை)யக் கட்சிக்காரர்கள் "ஈழம்" என்று வாயைத் திறந்தாலே போதும் எகிறிக்குதித்து வந்துவிடுகிறார்கள்.

அதைப் பார்க்கும்போது இவர்களுக்குத் தலைவர் சோனியா காந்தியா? அல்லது ராஜபக்சேவா? என்கிற நியாயமான கேள்வி ஆறறிவு உள்ளவர்கள் எவருக்கும் எழத்தான் செய்யும். அதுசரி…… இந்தப் பேராயக் கட்சி இப்போதுதான் இப்படியா……? அல்லது எப்போதும் இப்படியா? என்கிற சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டிய வரலாற்றுக் கட்டாயம் இன்றைய தலைமுறைக்கு ஏற்பட்டிருக்கிறது.

ஆக்டேவியன் ஹியூம் என்கிற வெள்ளைக்காரனது கருவில் உருவான இந்தக் காங்கிரஸ் முட்டை "வெள்ளையனே வெளியேறு" என்கிற சரணத்தோடு துவக்கவில்லை தனது "தேசபக்திப்" பாட்டை. "மாட்சிமை தாங்கிய பிரிட்டிஷ் மகாராணியார் நீடூழி வாழ்க" என்றே தனது அன்றாடப் பணிகளை ஆரம்பித்தது. ஆம். இந்திய "சுதந்திரப்" போராட்ட வரலாற்றை அறிந்து கொள்ளும் ஒவ்வொருவரும் காங்கிரசின் துரோக வரலாற்றையும் அறிந்து கொண்டால்தான் தற்காலத் தற்குறிகளின் தொடைதட்டல்களை விளங்கிக் கொள்ள முடியும்.

மாவீரன் பகத்சிங்கும் அவனது தோழர்களும் இந்தியாவின் உண்மையான சுதந்திரத்திற்காக தூக்குக் கயிற்றை முத்தமிட்டு இன்றோடு எழுபத்தி எட்டு ஆண்டுகள் உருண்டோடி விட்டது. ஆனால் அம்மாவீரன் தூக்கு தண்டனையை எதிர்நோக்கிக் காத்திருந்த வேளையில் மகா ஆத்மா காந்தி ஒரு கடிதம் எழுதினார் பிரிட்டிஷ் பிரபு எமர்ஸனுக்கு. என்னவென்று தெரியுமா நண்பர்களே……? "நீங்கள் தூக்கில் போடுவதென்று முடிவு செய்துவிட்டால் கராச்சியில் நடக்க இருக்கும் காங்கிரஸ் மாநாட்டுக்கு முன்னரே அவரை போட்டு விடுவது நல்லது." என்று.

இன்று காங்கிரசார் தபால்தலை உட்பட இன்னபிற இத்யாதிகளுடன் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடும் மாவீரன் பகத்சிங் அன்றைய காங்கிரஸ்காரர்களுக்கு "தீவிரவாதி". அதுவும் கராச்சி மாநாட்டுக்கு முன்னரே தூக்கிலேற்றப்பட வேண்டிய "பயங்கரவாதி."

"தாழ்த்தப்பட்டோருக்கு தனி வாக்காளர் தொகுதிதான் ஓரளவுக்காவது அம்மக்கள் தங்கள் உரிமைகளைப் பெற உரிய வழி" என முழங்குகிறார் அம்பேத்கர். அதன் தார்மீக நியாயம் புரிந்து 1932 இல் பிரிட்டிஷ் பிரதமரே தீர்ப்பு அளிக்கிறார் "அம்பேத்கரின் நியாயம் அங்கீகரிக்கப்படுகிறது" என்று. "இது எங்களுக்குள் பிரிவினையை ஏற்படுத்திவிடும்" என்று எரவாடா சிறையிலேயே "சாகும்வரை" "உண்ணாவிரதத்தை" அறிவித்து அம்பேத்கரை அல்லலுக்கு ஆளாக்குகிறார்கள் காந்தியும், காங்கிரசாரும். அப்போதுதான் இந்த "உண்ணாநோன்பு" குறித்து கிண்டலடித்து நீதிக்கட்சியின் நாளேடான திராவிடன் எழுதியது : "காந்தியார் எதற்காகத் தமது உயிரைத் தியாகம் செய்யத் துணிந்தார் என்றால் இந்திய நாட்டில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய்த் தாழ்த்தப்பட்டு…… ஒடுக்கப்பட்டு…… நாதியற்று…… நசுங்கிக் கிடக்கும் ஏழு கோடி பிணங்களுக்கும் தனிப் பிரதிநிதித்துவம் வழங்கப்பட்டதே காரணமாம் ! அந்தோ இக்காரணத்தை எண்ணும்போதுதான் காந்தியின் ஒரு உயிரை விட எமது ஏழுகோடி ஏழை மக்களின் ஏழு கோடி உயிர்கள் பெரிதல்ல என்ற எண்ணம் நமக்குத் தோன்றுகிறது."

தலித் மக்களின் விடுதலைக்காக சாகும் வரையிலும் போராடிய மாமனிதன் அம்பேத்கர் அன்றைய காங்கிரசாருக்கு "இந்து சமூகத்தைக் கூறு போட வந்த குழப்பவாதி". இன்றைய கதர்சட்டைகளுக்கு இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை வார்த்தெடுத்த மேதை.

இந்திய தேசிய ராணுவத்தை அமைத்து பிரிட்டிஷ்காரர்களுக்கு கிலி மூட்டிய ஆனானப்பட்ட நேதாஜி சுபாஷ் சந்திர போசே காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்குள் பட்டபாடும்…… ஆன பிற்பாடு கதர்க்குல்லாக்களிடம் பட்டபாடும்…… பிற்பாடு "உங்கள் சகவாசமே வேண்டாம்…… உங்கள் கதர்க்கொரு கும்பிடு…… உங்கள் காங்கிரசுக்கொரு கும்பிடு……" என்று வெறுப்போடு வெளியேறியதையும் வரலாறு தனது பக்கங்களில் அழுத்தமாகப் பதித்து வைத்திருக்கிறது. "சுபாஷ் போஸ் நம்பத் தகுந்தவரே அல்ல என்பதை நான் கவனித்து வந்துள்ளேன். எனினும் காங்கிரசின் அடுத்த தலைவராக வரக்கூடியவர் அவரைத் தவிர வேறு யாருமல்ல." இது காந்தி வல்லபாய் பட்டேலுக்கு எழுதிய கடிதம். நவம்பர் 1. – 1937.

ஆக அன்றைய காங்கிரசாருக்கு நேதாஜி நம்பத்தகாதவர். இன்றைய காங்கிரசாருக்கு நேதாஜி நம்பிக்கை நாயகன்.

சொந்த நாட்டின் விடுதலை வீரர்களுக்கே "தீவிரவாதி……" , "பயங்கரவாதி……" எனப் பட்டம் சூட்டியவர்கள்…… அண்டை நாட்டின் போராளிகளையா அங்கீகரிக்கப் போகிறார்கள்……? இது மட்டும் என்றில்லை. சமூக மாற்றங்களுக்கான அடித்தளம் எங்கெங்கெல்லாம் ஆரம்பிக்கப்பட்டதோ…… அங்கெங்கெல்லாம் அதன் அடிக்கல்லை உருவுவதே அதன் தலையாய "தேசபக்த"ப் பணியாக இருந்திருக்கிறது.

நடைவண்டி பழகும் நாட்களிலேயே பெண்குழந்தைகள் விதவைக் கோலம் பூணும் கோரம் சகியாமல் கொண்டுவந்த "இளம் வயது விவாக விலக்கு மசோதா"வை…… "பால்ய விவாகமில்லாவிட்டால் உண்மையான கற்பு சாத்தியமில்லை" என்று சண்டித்தனமாய் எதிர்த்தவர் தமிழ்நாடு காங்கிரஸ் சுயராஜ்ஜியக் கட்சி உறுப்பினர் எம்.கே.ஆச்சாரியார்தான்.

கடந்த நூற்றாண்டின் துவக்க காலங்களிலேயே தான் நம்பிய கொள்கைக்கு உண்மையாய் கதர் உடுத்தி…… தனது குடும்பத்தவர்களையும் உடுத்த வைத்து…… கள்ளுக்கடை மறியல்களில் ஈடுபட்டு…… வைக்கத்தில் தெருநுழைவுப் போராட்டங்களில் கைதாகி…… வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை வலியுறுத்தி…… இறுதியில் தன் உழைப்பு அனைத்தும் விழலுக்கு இரைத்த நீராய் போனதைப் புரிந்து கொண்டு…… "இனி காங்கிரசை ஒழிப்பதே என் முதல் வேலை." என வெளியேறிய தந்தை பெரியாரையே ஆப்படித்துப் பார்த்தவர்கள் அல்லவா இந்தக் கதரின் பிதாமகர்கள்?

அவ்வளவு ஏன்……? நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் இரத்தக்கண்ணீர், போர்வாள், தூக்குமேடை உட்பட பல நாடகங்களுக்குத் தடை விதித்தும்…… 144 தடை உத்திரவு போட்டும்…… நாடகத் தடைச் சட்டம் கொண்டு வந்தும்……சரமாரியாக கல்வீச்சு நடத்தியும் கருத்துச் சுதந்திரத்தை "நிலைநாட்டிய" கண்ணியவான்கள்தான் இந்த அகிம்சையின் புத்திரர்கள்.

ஆனால், அந்தச் சேற்றிலும் காமராசர் என்கிற செந்தாமரை முளைக்கத்தான் செய்தது. எந்தக் காங்கிரஸ்காரர்கள் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளை மீது ஏறி நின்று "அகிம்சையை" நிலைநாட்டினார்களோ…… அதே ஆட்கள் மத்தியில் "எம்.ஆர்.ராதா அவர்கள் என்னை எத்தனைதரம் திட்டி இருப்பார் என்று நினைக்கிறீர்கள். அவர் திட்டியதற்காக நான் ஒன்றும் வருத்தப் படவில்லை. அவர் திட்டியதில் நியாயம் இருக்கிறதா என்று பார்ப்பேன். நியாயம் இருந்தால் எடுத்துக் கொள்வேன்." என்று முழங்கினார் காமராசர். தன்னையே விமர்சித்தாலும் மாற்றுக்கருத்துக்களுக்கு மதிப்பளித்த காமராசர் எங்கே……?

நியாயமான கருத்துக்களைக் கூட சகித்துக் கொள்ள முடியாத தங்கபாலுக்களும்…… இளங்கோவன்களும் எங்கே……?

எல்லாவற்றுக்கும் மேலாய்…… காங்கிரஸ் நண்பர்களிடம் கேட்பதற்கும் நியாயமான கேள்வி ஒன்றிருக்கிறது. "பொட்டுக்கட்டுதல்" என்கிற பெயரால் ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்த பெண்கள் மட்டும் தேவரடியார்களாக சிறுகச் சிறுகச் செத்துக் கொண்டிருந்தபோது அதைத் தடுக்கக் கொண்டு வந்ததுதான் "தேவதாசி ஒழிப்புச் சட்டம்". ஆனால் அச்சட்டம் வந்தால் "எங்கள் பண்பாடு கெட்டுப் போகும்…… எங்கள் கலைகள் அழிந்துவிடும்……" என்று பெண் இனத்துக்கே எதிராக குரல் கொடுத்தவர்தானே சத்தியமூர்த்தி……

இன்னமும் அவர் பெயரால் உங்கள் "பவன்" இயங்குவது நியாயமா……?

அல்லது…… கடைக்கோடி மனிதனுக்கும் இந்தக் கல்வி போயாக வேண்டும் என்று வாழ்வின் இறுதிவரை கவலைப்பட்டாரே காமராசர்……

அந்தக் காமராசரின் பெயரால் உங்கள் "பவன்" இயங்குவது நியாயமா……?

யோசியுங்கள்.

ஆனால், அதற்கும் முன் தமிழ் மக்களும் தங்கள் மனதில் அழுத்தமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டியது ஒன்றிருக்கிறது.

அதுதான் :

கதர்ச்சட்டைக்காரர்கள் இன்று யார் யாரையெல்லாம் தியாகிகள் என்கிறார்களோ

அவர்களெல்லாம் நாளைய துரோகிகள்.

அவர்கள் யார் யாரையெல்லாம் துரோகிகள் என்கிறார்களோ……

அவர்களே நாளைய தியாகிகள்.

அவர்களது அகராதிப்படியே.

நன்றி : "தமிழக அரசியல்" வார இதழ்.

January 17, 2009


Jan 27, 2009

"தமிழன் என்றே அறியப்படுவோம்"

நான் சென்னையில் பிறந்து வளர்ந்தவன் இதை நான் முதலிலேயே இங்கே பதிய காரணம் உண்டு. இந்தியாவிற்கு எதிராக எழுதினால் உடனே சில "ஜந்துக்கள்" எழுதியிருப்பவன் "ஈழத்தமிழன்" என்று சொல்லி விடுகிறார்கள் எனவே தான் மீண்டும் சொல்கிறேன் நான் தமிழ்நாட்டு தமிழன். இதோ விஷயத்தை தருகிறேன். "ஓ இந்தியர்கள் என்று இன்னும் சொல்லி கொண்டிருக்கும் தமிழ்நாட்டு தமிழர்களே.., மீண்டு வாருங்கள்.., நம் இனத்தை மீட்க வாருங்கள் அல்லது உங்களை மீட்டு கொள்ளவாவது "இந்தியன்" என்ற பிரமையில் இருந்து மீண்டு வாருங்கள்..., இங்கே தேசியம் என்பதில் நமது தமிழ்நாடு அடக்கம் இல்லை என்பதை நமது பிடரியில் அடித்து பலமுறை அவர்கள் நிருபித்து விட்டார்கள். காவிரிக்காக கன்னடன் அடித்தான் பலமுறை, முல்லை பெரியாறு_க்காக கேரளத்தவன் அடித்தான் பலமுறை, பாலாற்றுக்காக தெலுங்கன் அடித்தான் பலமுறை, மாரட்டியத்திலும் "வெளியேறி ஒடு" என்று சிலமுறை அடித்தான். இப்படி சிலமுறை பலமுறை பலரால் அடிப்பட்டு நாம் இன்று சுயநினைவை இழந்து விட்டதாகவே உணர்கிறேன். நமக்கு சுரணை என்ற "விழிப்பு" வந்து விடகூடாது என்பதற்காக சில "வித்தகர்களும்" "இன விற்பன்னர்களும்" நம் தமிழ்நாட்டினுள் "விழிப்பாகவே" இருக்கின்றனர் அதன் மூலமாய் செழிப்பாகவும் இருக்கின்றனர். உ.பி பாபர் மசூதி இடிப்பாகட்டும், குஜராத் கோத்ரா எரிப்பாகட்டும், நாடாளுமன்ற தாக்குதலாகட்டும், காஷ்மீர் பிரசினையாகட்டும், அஸ்ஸாம் உல்பா தாக்குதலாகட்டும், திரிபுரா தீவிரவாதமாகட்டும், ஆந்திரா தெலுங்கானாவாகட்டும், பெங்களூரு குண்டு வெடிப்பாகட்டும், மும்பை தாக்குதலாகட்டும் இவை எல்லாவற்றுக்குமே நம் மாநில பத்திரிக்கைகளில் முதலிடம் உண்டு, தமிழ்நாட்டு அரசியல் தொழிலதிபர்களின் தொலைக்காட்சிகளில் தலைப்பு செய்தியாகவும் இடம் உண்டு. ஆனால் சிந்தித்து பார் தமிழனே.., இந்தியாவின் ஒரு மாநிலமாவது நம் இனத்தின் ரத்த உறவுகள் செத்து விழுவதை சரியாய் படம் பிடித்து காட்டினவா? அல்லது நம் குரலை தான் செவிமடுத்தனவா? மும்பை தாக்குதலையும் சீமான்களின் சொர்க்கபுரிகளான "தாஜ்" தாக்குதலையும் பட்டி மன்றம் வைத்து குற்றம் யாருடையது என்பதை கண்டுபிடிப்பதிலும் அவர்களெல்லாம் "மும்பைக்கர்கள்" என்று ஒற்றுமையை வளர்ப்பதிலும் காட்டிய வேகத்தில் ஒரு பகுதியை நம் ஈழத்தமிழினம் பற்றிய ஒரு "பட்டி மன்றம்" நடத்த முனைந்திருக்குமா இந்த இந்தியா? மும்பை தாக்குதலுக்கு முசிறி-யில் தட்டி வைத்து கண்டிக்கிறான் தமிழன் ஆனால் ஈழத்தமிழனின் 30 ஆண்டுகால கொலைநிகழ்வுகளை எந்த வேற்று மாநிலத்தவன் "தட்டி" வைத்து கண்டித்தான். தமிழனாய் இந்த பட்டியலை படித்து பார்த்தால் இதை படித்து முடிக்கும் வேளையில் நீங்கள் "இந்தியனாய்' இருக்க வாய்ப்பிருக்காது ஆனால் "பலகாலமாய் பட்ட" பின்னும் மாறாத வரட்டு தேசியம் இன்னும் சிலருக்கு அத்தனை சுலபத்தில் மாறி விடாது என்பதும் எனக்கு தெரியும். நான் என்ன செய்ய முடியும் என்று அத்தனை சுலபத்தில் சலித்து கொண்டு விட்டு விடமாட்டேன் காரணம் இது காட்டு விலங்குகளின் வேட்டையியல் சார்ந்த விஷயமல்ல. இது என் தமிழ் இன மக்களின் வாழ்வியலும் வரலாறும் சார்ந்த விஷயம். நம்மை சுற்றி கட்டப்பட்டிருக்கும் "தேசிய கோட்டை" என்பது வெறும் மாயையே. அடிப்படை கல்வி முறையிலிருந்து ஆரம்பித்து சிந்தித்துப்பார். நம் கண்முன்னே ஒரு மெல்லிய பனிமூட்டம் விலகுவது போல் தோன்றும். ஆரம்பபள்ளியில் தொடங்கி உயர்நிலைப்பள்ளி வரை வரலாற்றில் நாம் படித்ததையும் தமிழனல்லாத மற்ற மாநில மாணவன் கற்றதையும் கொஞ்சம் ஒப்பிட்டு பார் இன்னும் கொஞ்சம் உன் கண்பார்வை முன்னுள்ள பனிமூட்டம் விலகும். காந்தியை நாம் அனைவரும் அறிந்து படித்து வைத்திருக்கிறோம் ஆனால் எத்தனை மற்ற மாநிலத்தவன் இந்தியாவின் முதல் சுதேசி கப்பல் ஒட்டி தன் வாழ்நாளில் இரு ஆயுள் தண்டணை பெற்று, தன் சொத்துக்களை காங்கிரஸ் கட்சிக்கு தானம் கொடுத்துவிட்டு கடைசிக் கால மரண வாழ்விலும் "விடுதலை" வேண்டி போராடி கஷ்ட ஜீவனத்தில் உயிரைவிட்ட நமது வ.உ.சி_யை தெரியும்? ரோஜாமலர் என்றால் "நேரு' என்கிறான் நம் மாணவன் ஆனால் வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று பாடிய வள்ளலாரை எத்தனை மற்ற மாநிலத்தவன் அறிந்து வைத்துள்ளான்? இரும்புமனிதன் யார் என்று கேட்டால் நம் மாநில மாணவர்கள் அனைவரும் உடனே வல்லபாய் பட்டேல் என்கிறார்கள் ஆனால் எத்தனை மற்ற மாநிலத்தவன் "கொடி காத்தவன்" என்று நாம் சொன்னால் "குமரன்" என்று சொல்கிறான்? லோகமான்யர் என்று சொல்ல தொடங்கும் போதே பாலகங்காதர திலகர் வரலாற்றை சொல்கிறான் தமிழ் மாணவன் ஆனால் எத்தனை மற்ற மாநிலத்தவன் கக்கனையும் காமராசரையும் படித்திருக்கிறான்? "வங்க கவிஞன்" யாரென்றால் நம்மவன் ரவீந்திரநாத தாகூர் என்கிறான் ஆனால் எத்தனை மற்ற மாநிலத்தவன் "மகாகவி" என்றால் பாரதி என்று தெரிந்து வைத்திருக்கிறான்? மாராட்டிய வீரன் என்றால் சிவாஜி என்று முழு வரலாற்றையும் சொல்வான் நம் இளைஞன் ஆனால் எத்தனை மற்ற மாநில இளைஞன் வெள்ளையனை வெளிற செய்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வீரம் அறிந்து வைத்துள்ளான்? பஞ்சாப் பகத்சிங்_ன் வீரம் நம் பட்டி தொட்டியெல்லாம் தெரிகிறது ஆனால் வாஞ்சிநாதனின் வீரம் பஞ்சாப்_ல் எத்தனை பேருக்கு தெரியும்? அம்பேத்கரின் பிறந்த ஊரில் அவருக்கான சிலையை வைக்க அனுமதி மறுக்கிறான் இங்கே பர்லாங்கிற்கு ஒரு அம்பேத்கர் சிலை..! அவர் கருத்தை ஒத்த நம் பெரியாருக்கு தமிழ்நாட்டை தவிர வேறெந்த மாநிலத்திலாவது அங்கீகாரம் தந்தார்களா? அல்லது தரவிட்டார்களா? அரண்மனை வாரிசுகளாய் பிறந்து விட்ட காரணத்தினாலும் எதிர்பாராத விபத்தில் இந்தியாவை ஆள வாய்ப்பு பெற்று விட்ட சில வீணர்களுக்கு இனதுரோகிகளுக்கு கூட தமிழ்நாட்டில் சிலை வைத்து வழிப்படுகிறார் நம்மில் சிலர் ஆனால் வேற்று மாநிலத்தில் எத்தனை பேர் எங்கள் "பேரறிஞர் அண்ணா"_வின் அறிவை ஆற்றலை ஏற்று கொள்ளும் மனம் படைத்தவனாய் உள்ளான்? தமிழ்நாட்டின் கிராமப்புறமாயினும் நகர்ப்புறமாயினும் குறைந்தது ஆயிரம் காந்திநகர், ஆயிரம் நேருநகர், ஆயிரம் இந்திரா நகர், ஆயிரம் ராஜீவ்(?) நகர்,ஆயிரம் படேல் தெரு, நூறு பகத்சிங் நகர், நூறு சிவாஜி நகர், திலகர் திடல் என்று இன்னும் பல மற்ற மாநிலத்தவர் பெயரில் எத்தனை எத்தனை நகர்கள் தெருக்கள்? ஆனால் எத்தனை மாநிலங்களில் நம் தமிழ்நாட்டு முன்னோர்களின் பெயரில் அறிஞர் பெருமக்கள் பெயரில் அரசியல் நேர்மையாளர்கள் பெயரில் வீதிகள் உள்ளன நகர்கள் உள்ளன. வான்மறை வள்ளுவம் தந்த திருவள்ளுவர் சிலையை கன்னடன் சாக்கு துணியால் பிரதேச பரிசோதனை கூட பிணத்தை போல இன்னும் பெங்களூருவிலே கட்டி வைத்திருக்கிறான். ஆனால் நாம் மட்டும் அகன்ற மனமும் ஆழ்ந்த சிந்தனையும் கொண்டவர்களாய் நம்மை இன்னும் காட்டி கொண்டிருக்கிறோம். ஆனால் நம் நிலை அவர்களுக்கு வேற்றாய் பலப்படுகிறது. அது "தமிழன்" சுரணையற்றவன் என்பதை அவர்கள் அறிந்தே வைத்துள்ளனர். இல்லையென்றால் ஐந்து வட இந்தியன் மரணத்திற்க்காக காங்கோ-வின் மீது ராணுவ தாக்குதல் தொடுத்த "தேசியம்" இத்தனை ஆயிரம் தமிழன் மடிகின்ற வேளையிலும் தமிழனுக்கான செயல்பாட்டில் மீளா உறக்கத்தில் இருக்குமா? இந்தியா ஈழத்தமிழன் விவகாரத்தில் உறங்கவில்லை அது கண்களை மூடி கொண்டே ஈழத்தமிழனின் மரண ஒலத்தை ரசித்து கேட்டு கொண்டுள்ளது. அப்படி ரசித்து கேட் கும் ஒரு ஈரமில்லா கூட்டத்தின் பெயர் தான் இந்தியா என்பதும் அதன் வெவ்வெறு பகுதி மக்களையும் இணைப்பதும் தான் "தேசியம்" என்றால் என் வீட்டு இழவு ஒலியை ரசித்து கேட்கும் அந்த "இந்தியன்" என்ற அடையாளமும் "தேசியம்" என்ற அவமானமும் இனி எனக்கு அவசியமில்லை இதை நான் என் குடும்பத்தாருக்கும் அறிவுறுத்தி விட்டேன் என் பிள்ளைகளுக்கும் கற்று தந்துவிட்டேன். இனி என்னை இந்தியன் என்று காண்பிப்பது என் கடவு சீட்டு மட்டுமே. அதுவும் கூட நாளை மாறலாம் ஒருவேளை எனக்கில்லா விடினும் என் சந்ததியினரின் கடவு சீட்டில் "தமிழன்" என்ற அடையாளம் இருக்கும். இனி என்னை நான் "தமிழன்" என்று மட்டுமே அடையாளப்படுத்தி கொள்வேன். சகோதரர்களே அப்படியானால் நீங்கள்...,