ஈழத்தின் சுதந்திர பிரகடனம் அறிவிக்கப்பட்டால்..,
ஈழத்தின் எல்லா ரத்தகறைகளுக்கும் குண்டு துளைகளுக்கும் முழுமுதற் காரண கர்த்தாக்கள் "சிங்களர்களே" என்பதே மறுக்கமுடியாத உண்மை. உலகின் எந்த மூலையிலும் அரங்கேற்றப்படாத அவலங்கள், வன்செயல்கள் இலங்கை அரசாங்கத்தால் நடத்தப்படுகின்றன. அதே போல் உலகின் எந்த ஒரு இனமும் இது போல் தன் சக இனமக்கள் மடிவதை இத்தனை ஆண்டுகள் வேடிக்கை பார்த்திருந்ததில்லை. அத்தகைய செயலை இந்திய தமிழ் இன மக்களாகிய நாம் செய்து கொண்டிருக்கிறோம். மக்களுக்கான உரிமைகளை அரசியல் தீர்வுகளால் சரி செய்ய முடியாத போது மக்களே அதற்கான தீர்வுகளை முன் வைக்க வேண்டும் அல்லது அவ்வாறான தீர்வுகளை முன் வைத்து போராடுபவர்களை ஆதரிக்க முன்வர வேண்டும்.ஈழத்தில் அத்தகைய போரட்டம் தான் நடந்து வருகிறது. உலகின் எல்லா மூலைகளிலும் வாழ்கின்ற தமிழர்கள் "தமிழீழம்" வெல்ல ஒன்று கூடி குரல் தர வேண்டிய தருணம் வந்துவிட்டது. ஆதரிப்பவர்கள் குரல் தருவீர். உலகின் வரைப்படத்தில் இன்னொரு தேசத்திற்கான எல்லைகள் வரையறுக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டிய நாளுக்கு மிக அருகில் நாம் வந்துவிட்டோம். அந்த புதியதேசம் நம் தமிழர்களுக்கான தேசமாய் இருக்க வேண்டும். அந்த தேசத்தின் உதயத்தை அந்த உதயத்தின் சுவாசத்தை,மண்ணின் மணத்தை,மக்களின் மகிழ்ச்சியை ஒரு கணம் நினைத்து பாருங்கள். அவை வார்த்தைகளில் அடங்கா உணர்வுகள், வாக்கியங்களில் வர்ணிக்க முடியா வரிகள். ஈழத்தின் சுதந்திர பிரகடனம் அறிவிக்கப்பட்டால் எல்லா தமிழனும் மீண்டும் தாயின் கருவறைக்குள் இருந்து வெளிவரும் நாள் அந்நாளாய் மாறும். ஆம் ஈழ தமிழனுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டு தமிழனுக்குமான பிறந்தநாளாய் நம் இனத்தின் சிறந்த திருநாளாய் தமிழீழத்தின் "சுதந்திர நாள்" அமையும். அமைய வேண்டும். அமைப்போம்....,
No comments:
Post a Comment