Mar 8, 2007

தமிழீழம் அது தனியீழம்

இந்திய நாட்டிற்கு தெற்கே ஏழ்தெங்க நாடு, ஏழ்மதுரை நாடு, ஏழ்முன்பாலை நாடு, ஏழ்பின்பாலை நாடு, ஏழ்குன்ற நாடு,ஏழ்குணகரை நாடு, ஈழ நாடு, ஏழ் குறும்பனை நாடு, குமரிக்கொல்லம் போன்று இருந்த நாற்பத்தொன்பது தமிழ் நாடுகளில் கடல் கோள்களால் மூழ்கியவை போக எஞ்சியிருப்பது, தமிழர் என்ற ஆதிகுடிகள் வாழ்ந்த ஈழ நாடு.
ஈழத்தில் வாழும் தமிழர்கள் குடியேறிகள் அல்ல! மண்ணின் மைந்தர்கள்! தோட்டத் தொழிலாளர்களைத் தவிரஇலங்கை என்று சொல்லப்படும் ஈழ நாடு முழுவதுமே தமிழர்கள் நாடு.
இலங்கையை ஆண்ட இராவணன் தமிழனே.கி.மு 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் வடபகுதியில் வாழ்ந்த விசயன் என்ற ஆரிய மன்னன் இலங்கை சென்று நிறுவித்த வம்சமே சிங்கள இனம் என்று வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இலங்கை வரலாறான மகாவம்சமும் அதைத்தான் கூறுகிறது.
இந்தியாவைச் சேர்ந்த இராமனால் தமிழர் அரசன் இராவணனுக்கு இன்னல்!இந்தியாவைச் சேர்ந்த விசயன் தோற்றுவித்த சிங்களவம்சத்தால் தமிழருக்கு இன்னல்!
கி.பி 1987ல் இந்தியா அனுப்பிய அமைதிப்படையால் தமிழருக்கு இன்னல்!விசயனால் உருவாகிய சிங்களவ அரசும், மண்ணின் மைந்தர்களாகிய தமிழரின் அரசும் அடிக்கடி சண்டையிட்டுக் கொண்டது வரலாறு.ஒன்றல்ல இரண்டல்ல! ஈராயிரம் ஆண்டுக்கும் மேலாக சிங்களர் தமிழர் போர்கள் நிகழ்ந்துள்ளன.
ஈழத்தமிழருக்கு ஆபத்தென்ற போதெல்லாம், ஈழ நாட்டில் தமிழ் ஆட்சிக்கு ஆபத்து வந்த போதெல்லாம்தமிழ் நாட்டை ஆண்ட பாண்டிய பல்லவ சோழ அரசர்கள் படை நடத்தி சிங்களர்களை அடக்கி ஆண்டிருக்கிறார்கள் என்பதுவும் வரலாறு.கரிகாலன், இராசராசன், குலோத்துங்கன், பாண்டியர்கள், காஞ்சிப்பல்லவர்கள் என்று அனைத்து தமிழருமே ஈழத்தில் தமிழருக்கு இடுக்கண் வந்தபோதெல்லாம் சிங்களரை ஒடுக்கி வைக்க கடல் கடந்து சென்றுள்ளார்கள்.
ஈழத்தில் பஞ்சம் வந்தகாலத்தில் தமிழகத்தைச் சார்ந்த சடையப்ப வள்ளல் என்பார் கப்பல்களில் உணவுப்பண்டங்களை அனுப்பி வைத்தார் என்று வரலாறு சொல்கிறது.
சிங்களர்கள் தமிழர்கள் மேல் கொண்டுள்ள இனவெறி ஏதோ பிரபாகரன் காலத்தது அல்ல. பல நூறாண்டுகள் சேர்ந்ததை ஈராயிரம் ஆண்டுகள் பழையது.சிங்களர்கள் தமிழரை சூறையாடுவது 10, 20 ஆண்டு நிகழ்ச்சி அல்ல; பல நூறாண்டு இன வெறி!
சிங்களரை அடக்கிய கரிகாலன் போர்க் கைதிகளை தமிழகத்துக்கு கொண்டு வந்து காவிரியின் இரு மருங்கும் கரையெடுத்ததுவும் கல்லணை கட்டியதும் வரலாறு!தீராப்பகையை கொண்டுள்ள சிங்களர்கள் தொடர்ந்து தமிழருக்கு இன்னல் விளைவித்தே வந்திருக்கிறார்கள்!
கி.பி 17 ஆம் நூற்றாண்டில் ஈழத்தமிழ் அரசின் மன்னனான சங்கிலி என்பவனை போர்த்துகீசியர் கொன்ற பின்னர் இதுவரை தமிழர் ஆட்சி நடந்ததில்லை ஈழத்தில்.
1947ல் ஆங்கிலேயர்கள் இலங்கைக்கு விடுதலை அளித்து சென்றதில் இருந்து தமிழ், சிங்கள பகுதிகள் இணைந்த இலங்கையில் சிங்களர் ஆட்சியே நடைபெற்று வருகிறது.ஆனால் சிறுபான்மையினரான தமிழரை சிங்கள அரசு இரண்டாம் குடிகளாகவே நடத்திவருகிறது.இன்று எக்காளமிட்டு தமிழர்களைக் கொன்று குவித்த இலங்கை அரசுகளின் சட்டப்படி, ஒருங்கிணைந்த இலங்கையில் ஒரு தமிழன் நாட்டின் அதிபராக வர முடியாது! ஏனென்றால் சட்டத்தில் இடமில்லை!ஏனென்றால் சிங்களருக்கு மனமில்லை!
இன்று சந்திரிகா அம்மையார் முதல் ராசபக்சே வரை, யாழ்ப்பாணத்திற்கு வேண்டுமானால் பிரபாகரன் முதல் அமைச்சராக இருக்கட்டும் என்று சொல்கிறார்கள்! நகைச்சுவையாய்த் தெரிகிறது! வேண்டுமானால் இலங்கையின் அதிபராக இருக்கட்டும் என்று சொல்லட்டுமே!பிரபாகரன் வேண்டாம்! வேறு எந்த தமிழரையாவது ஆக்கட்டுமே ? முடியாது! காரணம் சட்டத்தில் இடமில்லை! அதை மாற்றவும் முடியாது!பயிர்செய்து, அறம் செய்து, தொழில் செய்து இலங்கையை ஆக்கிவைத்த தமிழருக்கு சம உரிமை சட்டப்படி மறுக்கப் பட்டது.பள்ளிகளில், வேலைகளில் தமிழர்கள் இரண்டாம் நிலையில்தான் இருக்க முடியும், சட்டப்படி!காவல்துறையில், இராணுவத்தில் தமிழர் கிடையாது! அதுவும் சட்டப்படி!ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது கூட இந்திய இராணுவத்தில், உயர்பதவிகளில் இந்தியர்கள் இருந்தனர்! "சர்" என்று பட்டமெல்லாம் பெற்றனர்!ஆனால் இலங்கையில் மக்கள் தொகையில் 20-30 விழுக்காட்டிற்கும் மேலான தமிழர்களுக்கு அந்த உரிமை மறுக்கப்பட்டது!செல்வச் செழுமையுடன் வாழ்ந்த தமிழர் மேல் சிங்களர் ஆத்திரம் கொண்டு அவர்கள் இல்லத்தை, அவர்கள் பெண்டுகளை, அவர்கள் சொத்துக்களை சூறையாடுவது நாளாவட்டத்தில் சிங்களரின் பொழுது போக்காகிவிட்டது!எத்தனை பெண்கள் மானமிழந்தனர்! எத்தனை ஆண்கள் மாண்டு மடிந்தனர்! எத்தனை தமிழர்கள் நாட்டை விட்டே வெளியேறினர்! கணக்கிலடங்கா!உலகம் முழுவதும் வாழும் தமிழர்களின் திசைகளே அதற்கு சான்று!சூறையாடல் நிகழ்ச்சிகளின் போது கொதிக்கும் தார்ச்சட்டிகளில் போட்டு தமிழ்க் குழந்தைகளைக் கொன்ற கொடூரம் ஆயிரமாண்டு காழ்ப்புணர்ச்சியின் உச்சம்!தமிழ்பெண்களைக் கற்பழித்துவிட்டு அவர்களின் அல்குல்லில் குண்டு வைத்து வெடித்த கொடூரம் ஒன்றல்ல இரண்டல்ல!சிங்கள இராணுவமும், சிங்களக் குண்டர்களும் சூறையாடி முடித்துவிட்டு "இங்கே தமிழர் கறியும் எலும்பும் இலவசமாக கிடைக்கும்" என்று எழுதிப் போட்டு தமிழர் தசையை கடை வைத்த கொடுமை உலகில் வேறெங்காவது நடந்திருக்கிறதா ?எழுதவே கைகள் நடுங்கும் செய்தியிது! இந்த அளவிற்கு தீராப் பகை கொண்ட சிங்களவருடன் தமிழர் இணைந்து வாழ முடியுமா ?ஈராயிரம் ஆண்டுப் பகையுடன் சமாதானம் செய்து கொள்ள இயலுமா ?
1940,50,60 களில் சிங்கள அரசுடன் சனநாயக முறையில் சம உரிமைக்காக குரலிட்டு அது நடக்கவே நடக்காது என்ற எண்ணம் தோன்றவே, தமிழ் மக்களிடம் சனநாயக முறையில் "தனிநாடு தேவையா இல்லையா ?" என்று வாக்கெடுப்பு நடத்தி கிட்டத்தட்ட 90 விழுக்காட்டு ஈழத் தமிழ் மக்களின் ஆதரவை பெற்ற பின்னரே தமிழருக்கு தனி ஈழம் தேவை என்று, அதையும் அமைதிப் போராட்டங்களினால் பெற முன்வந்தனர் தமிழர்கள்.ஆயினும் தொடர்ந்து நடந்த சிங்கள அட்டூழியங்களில் இருந்து காத்துக் கொள்ள தமிழரும் ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயம் ஏற்படவே பல ஆயுதம் தாங்கிய குழுக்கள் தோன்றி தமிழ் மக்களை காக்கும் பணியில் ஈடுபட்டன. அவைகளே விடுதலைப் போர்களையும் முன்னின்று நடத்தி வர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு செயல்படுத்து வந்தன! வருகின்றனர்!
தமிழருடன் சிங்களவர் கொண்டுள்ள பகையுணர்வு கடுமையாக இருக்க, தமிழர்களால் அவர்களுடன் இணைய முடியாமல் இருக்க, இந்தியாவில் வாழ்பவர்களில் ஒரு சிலரோ, தங்களின் காலகாலமான தமிழ் எதிர்ப்பின் ஒரு பகுதியாக, "இந்திய ஒருமைப்பாடு" என்ற போர்வையில் இந்தியாவிலிருந்து சென்று உருவாக்கி வளர்க்கப்பட்ட சிங்களருக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள்!
இன்று தனி ஈழம் அமைந்தால் நாளை அது தனித் தமிழ்நாடு கோரிக்கையாக உருவாகும்; அது இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு ஆபத்து என்பதே இவர்கள் கூறுவது!ஆனால் "தமிழ் ஈழம்" தேவை என்பதின் அடிப்படையும் தனித்தமிழ்நாடு கோரிக்கை வந்தால் அதன் அடிப்படையும் ஒன்றாக இருக்கும் என்று கருதுவது பைத்தியக்காரத்தனம்! வடிகட்டிய முட்டாள்தனம்!ஈழத்திலே தமிழர் ஒருவர் நாட்டின் அதிபராக வர முடியாது! ஆனால் இந்தியாவிலே அது நடக்கும்!ஈழத்திலே சிறுபான்மையினரான தமிழர், அதிபராக வர இயலாது! ஆனால் இந்தியாவிலே சிறுபான்மையினர் வரமுடியும்; வந்திருக்கிறார்கள்! இசுலாமியர் அதிபராக இருந்திருக்கிறார்!இந்தியாவிலே, குமரி முதல் இமயம் வரை அனைத்து குடிமகனுக்கும் சட்டம் ஒன்று! உரிமைகள் ஒன்று! அனைவரும் இந்தியரே! ஆனால் இலங்கையில் நிலை அதுவல்ல!இரண்டே இனங்கள் உள்ள நாடு இலங்கை! பல மொழி, இன, கலைகள் கொண்ட நாடு இந்தியா.தமிழர்கள் கர்நாடகாவில் கொல்லப்பட்டால் அதை வங்காளிகளோ அல்லது மராட்டியரோ வாழ்த்த முடியாது! வாழ்த்த மாட்டார்கள்!ஒரிசாவின் வெள்ளத்துக்கும், குசராத்தின் பஞ்சத்துக்கும் இந்தியாவின் எல்லா மாநிலங்களும் பங்களிக்கின்றன.பாகித்தான், சீனப் போர்களில் மட்டுமல்ல நேதா'சி அவர்களின் இந்தியப்படைகளிலும் இடம் பெற்றவர்கள் தமிழர்கள். நேதா'சி அவர்களின் இந்திய தேசியப் படையில் பங்கு கொண்ட மறவர்கள் எத்தனையோ பேர்! அப்படையின் தளபதியாக இருந்தவர் தமிழ்ப் பெண்மணி!இந்தியாவின் எந்த இடத்திலும் வேலைசெய்ய மற்றும் உயர்பதவி வகிக்க தமிழர்களுக்கு உரிமை உண்டு!இன்று கேரள, கர்நாடக, ஆந்திர அரசுகளிடம் தமிழகம் கையேந்தி நிற்கலாம்! வருத்தமான விடயம்தான்! ஆயினும் தமிழர்கள் தங்கள் சரியான மதியுடன் இயங்கினால் சிக்கல் தீர்வதற்கு வாய்ப்பிருக்கிறது.தமிழர்களைக் கொல்வோம்! தமிழ்ப் பெண்களைக் கற்பழிப்போம்! தமிழர்களுக்கு மட்டும் இரண்டாம் குடியுரிமை என்ற நிலை இந்தியாவில் இல்லை!ஆனால் ஈழத்தில் உண்டு! சட்டப்படியும் உணர்வுப்படியும் உண்டு!15 மொழிகளை ஆட்சி மொழியாக்கல், நதிகளை இணைத்தல், மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் போன்ற பல்வேறு ஒருமைப்பாட்டு செயல்களுக்கு இந்தியாவில் வாய்ப்பிருக்கிறது!ஆகவே தனி ஈழத்தையும், இந்திய ஒருமைப்பாட்டையும் ஒப்பிடுபவர்கள் சுயநலக்காரர்கள்; அல்லது அறிவிலிகள்!தனி ஈழம் என்பது வேதனையிலிருந்தும் சோதனையிலிருந்தும் தமிழர் வெளியேற அமைய வேண்டியது! ஆதலின்தான் "தமிழ் ஈழம் அது தனி ஈழம்" என்ற கொள்கை நோக்கித் தமிழர்கள் ஓயாதுழைத்து வருகிறார்கள்.ஒரு சில ஆண்டுகள் ஒவ்வாமை இருந்ததால் உருசிய நாடு 15 நாடுகளாகப் பிரிந்து கொண்ட போது, ஈராயிரம் ஆண்டாக சிங்களரின் பகைக்கு ஆளாகியுள்ள தமிழினம் தனியாகப் போவது நியாயமல்லவா ?அதன் குறுக்கே நிற்பவர் யாராக இருந்தாலும், அது மனிதாபிமானமற்ற செயல் அல்லவா ?

கட்டுரை ஆக்கம். திரு.நாக.இளங்கோவன்

Mar 5, 2007

விடுதலைப் புலிகளும் எம்ஜிஆரும்!

(தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்கள் எழுதிய "விடுதலை" என்னும் கட்டுரைத் தொகுப்பு நூலில் இருந்து சில பகுதிகள்)

விடுதலைப்புலிகள் தலைமை தாங்கி முன்னெடுத்து வரும் தமிழீழ சுதந்திர இயக்கத்திற்கு எம்.ஜி.ஆர். அவர்கள் நல்கிய உதவி அளப்பரியது. எல்லாவற்றையுமே முழுமையாக இங்கு ஆவணப்படுத்த முடியாதபோதும், ஒரு சில முக்கிய சம்பவங்களையாவது பதிவு செய்வது வரலாற்று ரீதியாகப் பயன்படும் எனக் கருதுகிறேன். இப்பொழுது தமிழ் நாட்டில் விடுதலைப் புலிகள் என்ற சொல்லை உச்சரிப்பதே சட்ட விரோதமான ஒரு குற்றச் செயலாகக் கருதப்படுகிறது. எம்.ஜி.ஆர். அவர்கள் வளர்த்து விட்ட அ.தி.மு.க. கட்சியும், அதன் தலைமையும் இன்று விடுதலைப் புலிகளுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்தி நிற்கின்றன. ஆனால் அன்று எம்.ஜி.ஆர். அவர்கள் ஈழ மக்களின் விடுதலைக்காக மிகவும் துணிச்சலான காரியங்களைப் புரிந்து எமக்கு கை கொடுத்து உதவியிருக்கிறார்.ஒரு தடவை சென்னைத் துறைமுகம் ஊடாக ஆயுதங்களை தருவிக்க முயன்றோம். எமக்கான நவீன ஆயுதங்கள் அடங்கிய கொள்கலனுடன் வெளி நாட்டுக் கப்பல் ஒன்று சென்னைத் துறைமுகம் வந்தடைந்தது. துறைமுகம் ஊடாக ஆயுதக் கொள்கலனை வெளியே எடுக்க நாம் செய்த பகீரத முயற்சிகள் பயனளிக்கவில்லை. சரியாக ஒரு மாதத்திற்கு முன்புதான் உமா மகேஸ்வரன் ஒழுங்கு செய்த ஆயுதக் கப்பல் ஒன்று இந்தியப் புலனாய்வுத் துறையினரால் கைபற்றப்பட்டது. பல கோடி பெருமதியான ஆயுதங்களை புளொட் இயக்கம் இழக்க நேரிட்டது. புலிகளுக்கும் இந்தக் கதி நேரக் கூடாதென விரும்பினோம். ஆயுதங்களை பறி கொடுக்காமல் வெளியே எடுப்பதற்கு எம்.ஜி.ஆரின் உதவியை நாடுவதே ஒரேயொரு வழியாக எனக்குத் தென்பட்டது. பிரபாகரனும் நானும், எம்.ஜி.ஆரிடம் சென்றோம். நிலைமையை எடுத்து விளக்கினோம்.“நீங்கள் கொடுத்த பணத்தில் இந்த ஆயுதங்களை வாங்கியிருக்கிறோம். சென்னைத் துறைமுகத்தில் ஒரு கப்பலில், ஒரு கொள்கலனுக்குள் இந்த ஆயுதங்கள் இருக்கின்றன. எப்படியாவது அதனை வெளியே எடுத்துத் தர வேண்டும். நீங்கள் மனம் வைத்தால் முடியும்” என்று கேட்டோம். எதுவித தயக்கமோ, பதட்டமோ அவரிடம் காணப்படவில்லை. “இதுதானா பிரச்சினை? செய்து முடிக்கலாம்” என்று கூறிவிட்டு, துறைமுக சுங்க மேலதிகாரிகளுடன் தொலைபேசியில் கதைத்தார். பின்பு எம்மிடம், ஒரு சுங்க அதிகாரியின் பெயரைக் குறித்துத் தந்து, அவரைச் சந்தித்தால் காரியம் சாத்தியமாகும் என்றார் முதலமைச்சர். அவருக்கு நன்றி தெரிவித்து விட்டு நாம் மகிழ்வுடன் வீடு திரும்பினோம்.சென்னைத் துறைமுகத்திலிருந்து ஆயுதக் கொள்கலனை மீட்டு வரும் பொறுப்பை கேணல் சங்கரிடம் கையளித்தார் பிரபாகரன். ஒரு சில தினங்களுக்குப் பின்னர் ஒரு நாள் இரவு தமிழ்நாட்டுக் காவல்துறையினரின் பாதுகாப்புடன் பாரம் தூக்கி பொருத்திய கனரக வாகனத்தில் எமது ஆயுதக் கொள்கலன் சென்னை நகரம் ஊடாகப் பவனி வந்து நாம் குறிப்பிட்ட ஒரு இடத்தில் இறக்கப்பட்டது. அதில் ஒரு தொகுதி ஆயுதங்கள் திருவான்மியூரில் நாம் வசித்த வீட்டில் குவிக்கப்பட்டன. ஏவுகணைகள், தானியங்கித் துப்பாக்கிகள், ரவைப் பெட்டிகள், கைக்குண்டுகளாக வீடு நிறைந்திருந்தது. அவை வீட்டிலிருந்து அகற்றப்படும் வரை என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை.எந்தப் பிரச்சினையுமின்றி பாதுகாப்பாக ஆயுதங்களாகப் பெற்றுத் தந்ததற்காக எம்.ஜி.ஆருக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார் பிரபாகரன். அந்தப் பேருதவியின் நினைவுச் சின்னமாக இறக்கப்பட்ட ஆயுதங்களிலிருந்து ஒரு புதிய ஏ.கே.47 ரக தானியங்கித்துப் பாக்கியை எம்.ஜி.ஆரிடம் கையளித்தார் பிரபா. அந்தத் துப்பாக்கியை கழற்றிப் பூட்டி அதன் செயற்பாட்டு இயக்கத்தையும் விளங்கப்படுத்தினார். எம்.ஜி.ஆருக்கு மட்டற்ற மகிழ்ச்சி.இந்தச் சம்பவம் நிகழ்ந்து நீண்டகால இடைவெளியின் பின்னர் ஒரு தடவை சுகவீனமுற்றிருந்த முதலமைச்சரை நான் சந்திக்கச் சென்றேன். பிரபாகரனை சுகம் விசாரித்தார். தமிழீழத்தில் சௌக்கியமாக இருக்கிறார் என்றேன். அப்பொழுது தனது படுக்கையில் தலையணிகளின் கீழ் வைக்கப்பட்டிருந்த ஒரு ஏ.கே.47 துப்பாக்கியை எடுத்துக் காண்பித்து, “இது பிரபாகரன் தந்த நினைவுப் பரிசு” என்று பெருமிதத்துடன் சொன்னார்.எமக்கு தேவை ஏற்பட்ட வேளைகளில் எம்.ஜி.ஆர். அளித்த நிதி உதவிகளை ஆதாரமாகக் கொண்டே இயக்கம் ஓடிக் கொண்டிருந்தது. ஒரு தடவை எமக்கு பெருமளவில் நிதி தேவைப்பட்டது. தலைவர் பிரபாகரன் அவர்கள் என்னை எம்.ஜி.ஆரிடம் தூது அனுப்பினார். நான் எம்.ஜி.ஆரை சந்தித்த பொழுது முதல்வருடன் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரனும் இருந்தார்.“இராணுவ - அரசியல் ரீதியாக எமது விடுதலை இயக்கம் பெருமளவில் வளர்ச்சி கண்டுவிட்டது. பல்வேறு வேலைத் திட்டங்களை நிறைவு செய்ய வேண்டி இருக்கிறது. இம்முறை பெரிய தொகையில் பணம் தேவைப்படுகிறது. தம்பி பிரபாகரன் உங்களைத் தான் நம்பியிருக்கிறார்” என்றேன்.“பெரிய தொகையா? எவ்வளவு தேவைப்படுகிறது?” என்றார் முதல்வர்.“ஐந்து கோடி வரை தேவைப்படுகிறது” என்றேன்.எம்.ஜி.ஆர். அவர்கள் திரு. பண்ருட்டி இராமச்சந்திரனைப் பார்த்து, “மாநில அரசு மூலமாக ஏதாவது செய்யலாமா?” என்று கேட்டார்.அமைச்சர் சில வினாடிகள் வரை சிந்தித்து விட்டு, “போரினால் பாதிக்கப்பட்ட ஈழத்து மக்களுக்கென தமிழ்நாட்டு அரசால் திரட்டப்பட்ட நிதி இருக்கிறது. நான்கு கோடிக்கு மேல் வரும். அந்த நிதியை இவர்களுக்குக் கொடுக்கலாமே? ஈழ மக்களின் உரிமைப் போராட்டத்திற்கு இந்நிதி வழங்கப்படுவதில் தப்பில்லை அல்லவா?” என்றார்.“அப்படியே செய்யுங்கள். இந்த விசயத்தை உங்கள் பொறுப்பில் விடுகிறேன்” என்றார் எம்.ஜி.ஆர்.இதனையடுத்து அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் அவர்களின் இல்லத் திற்கு இரவு பகலாக அலைய வேண்டியிருந்தது. “தமிழ்நாட்டு அரசின் பொறுப்பிலுள்ள நிதி என்பதால், ஒழுங்கான முறையில் செய்ய வேண்டும். வேலைத் திட்டம் ஒன்று தயாரித்துத் தாருங்கள். இத் திட்டம் நான்கு கோடி ரூபா வரையிலான செலவீனங்களைக் கொண்டிருக்க வேண்டும்” என்றார் அமைச்சர். அவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க ஒரு மருத்துவமனை நிர்மாணத்திற்கான வேலைத் திட்டத்தைத் தயாரித்து அமைச்சரிடம் கையளித்தேன். இறுதியாக ஒரு அரச செயலகத்தில் வைத்து நான்கு கோடி ரூபாவுக்கான காசோலை எனக்கு கையளிக்கப்பட்டது.இந்த நிதி விவகாரத்தில் அரச அதிகாரிகள் பலர் ஈடுபட்டதால், தமிழ்நாட்டு ஊடகங்களுக்கு செய்தி கசிந்து விட்டது. மறுநாள் காலை ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ ஆங்கிலப் பத்திரிகையின் தலைப்புச் செய்தியாக இவ் விவகாரமும் அம்பலமாகியது. அது ஒரு ஆயுதப் போராட்டத்திற்கு தமிழ்நாட்டு அரசு நிதியுதவி செய்வதாகவும், தமிழக முதலமைச்சர் இலங்கையின் இறைமையை மீறுவதாகவும், ஜனாதிபதி ஜெயவர்த்தனா இந்தியப் பிரதமர் திரு.ராஜீவ் காந்தியிடம் கடுமையாக ஆட்பேசம் தெரிவித்தார். ராஜீவ் காந்தி உடனடியாகவே எம்.ஜி.ஆரிடம் தொடர்பு கொண்டு தமது ஆட்சேபத்தைத் தெரிவித்தார்.அன்று மாலை தன்னை அவசரமாக சந்திக்குமாறு எம்.ஜி.ஆர். எனக்கு அழைப்பு விடுத்தார். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லை என்ற கவலையோடு நான் முதலமைச்சரின் இல்லத்திற்குச் சென்றேன். அங்கு முதல்வருடன் அமைச்சர் பண்ருட்டி இராமச்சந்திரன் இருந்தார்.ஆத்திரத்துடன் காணப்பட்டார் எம்.ஜி.ஆர். ஜெயவர்த்தனா ராஜீவிற்கு முறையிட்டதையும், ராஜீவ் தனக்கு ஆட்சேபணை தெரிவித்ததையும் விவரமாகச் சொன்னார். சிங்கள வெறியன் என்றும், ஈழத் தமிழர்களுக்கு கொடுமை இழைப்பவன் என்றும் முதலில் ஜெயவர்த்தனாவைத் திட்டித் தீர்த்தார். ராஜீவையும் விட்டு வைக்கவில்லை. துணிவில்லாதவர் என்றும், பயந்த பேர்வழி என்றும் ராஜீவிற்கும் திட்டு விழுந்தது. “ஈழத் தமிழர்களுக்கு திரட்டிய நிதியை அந்த மக்களின் உரிமைக்காகப் போராடும் விடுதலை இயக்கத்திற்கு கொடுப்பதில் என்ன தவறு? இதனை பிரதம மந்திரி புரிந்து கொள்ளவில்லையே” என்று ஆதங்கப்பட்டார் முதல்வர்.“அந்தக் காசோலையை வைத்திருக்கிறீர்களா? வங்கியில் போடவில்லை அல்லவா?” என்று கேட்டார்.“அந்தக் காசோலை என்னிடம் தான் இருக்கிறது” என்றேன். அதனை அமைச்சரிடம் திருப்பிக் கொடுக்கும்படி சொன்னார்.“நாளை இரவு வீட்டுக்கு வாருங்கள். எனது சொந்தப் பணத்திலிருந்து நான்கு கோடி தருகிறேன்” என்றார். போன உயிர் திரும்பி வந்தது போல இருந்தது. ஒரு நிம்மதிப் பெருமூச்சுடன் எம்.ஜி.ஆருக்கும், அமைச்சர் பண்ருட்டிக்கும் நன்றி சொல்லி விட்டு புறப்பட்டேன். வீடு திரும்பியதும், நடந்ததை எல்லாம் பிரபாகரனுக்கு எடுத்துச் சொன்னேன். முதல்வரின் பெருந்தன்மையைப் பாராட்டினார் பிரபாகரன். மறுநாள் இரவு எம்.ஜி.ஆரின் பாதாளப் பண அறையிலிருந்து நான்கு கோடி ரூபாய் புலிகளின் கைக்குக் கிட்டியது.விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் தமிழ்நாட்டு அரசுக்கும் மத்தியில் நல்லுறவு நிலவியது. எமது இயக்கத்தின் மீதும் தலைவர் பிரபாகரன் மீதும் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் கொண்டிருந்த அன்பும் மதிப்புமே இந்த நல்லுறவுக்கு ஆதாரமாக விளங்கியது.

...........................

சதாம் உசேன் ஒரு வரலாறு! (பாகம் 3)

சதாம் உசேன் ஒரு வரலாறு! (பாகம் 3)

16 மார்ச் 1988 அன்று உலகை அதிர வைத்த அந்த சம்பவம் நடந்தது. வட ஈராக்கில் குர்திஸ் இன மக்கள் வாழுகின்ற ஹலப்ஜா என்ற நகரத்தின் மீது ஈராக்கிய யுத்த விமானங்கள் நச்சுவாயுத் தாக்குதலை மேற்கொண்டன. குழந்தைகள், பெண்கள் உட்பட 5.000இற்கும் மேற்பட்டோர் கருகி இறந்து போனார்கள். 10.000இற்கும் மேற்பட்டோர் கடும் பாதிப்புக்கு உள்ளாகி, அங்கவீனர்கள் ஆனார்கள். பாதிக்கப்பட்டவர்களிலும் பலர் நச்சுவாயுவின் தாக்கத்தினால் பின்பு மெது மெதுவாக சித்திரவதைப்பட்டு இறந்தார்கள். சதாம் உசேன் செய்த குற்றங்களில் மனித குலத்திற்கு எதிரான மிகக் கொடிய குற்றமாக ஹலப்ஜா மீதான நச்சுவாயுத் தாக்குதல் அமைந்தது. நச்சுவாயுத் தாக்குதல் குறித்த செய்தி வெளியில் கசிந்ததும், மேற்குலக நாடுகள் சதாம் உசேனை காப்பதற்கு முனைந்தன. பழியைத் தூக்கி ஈரான் மீது போட்டன.இந்த தாக்குதல் குறித்து ஆராய்வதற்கு அமெரிக்கா ஒரு விசாரணைக் கமிஷனை அமைத்தது. அந்த விசாரணைக் கமிஷனும் சொல்லிக் கொடுத்தது போன்று ஈரான்தான் குர்திஸ் மக்கள் மீது நச்சுவாயுத் தாக்குதலை மேற்கொண்டது என்று அறிக்கை கொடுத்தது. நச்சுவாயுத்தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட மூலப்பொருள் ஈராக்கிடம் இல்லை என்றும், அது ஈரானிடமே இருக்கிறது என்றும் அமெரிக்க உளவு நிறுவனமாகிய சிஐஏயும் தகவல்களை பரப்பி இருந்தது. தாக்குதல் நடந்த பொழுது ஹலப்ஜாவில் ஈராக் இராணுவம் நிலைகொண்டிருந்ததாகவும், ஆகவே ஈரான் இராணுவமே ஈராக் படைகளுக்கு எதிராக இந்த தாக்குதலை மேற்கொண்டன என்று இன்னும் ஒரு பொய்யான கதையும் மேற்குலக ஊடகங்களில் வலம் வந்தன. ஆனால் உண்மை வெளிவருவதை தடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் ஈராக்தான் நச்சுவாயுத் தாக்குதலை நடத்தியது என்பது ஓரளவு உறுதியாகி விட்டது. அப்பொழுதும் மேற்குலக நாடுகள் குறிப்பாக அமெரிக்கா ஈராக்கை நியாயப்படுத்துகின்ற வேலையத்தான் செய்தன. ஈராக் படைகள் ஈரான் படைகள் மீது தாக்குதலை நடத்துகின்ற பொழுது, குர்திஸ் மக்கள் இடையில் அகப்பட்டு விட்டனர் என்று மேற்குலக நாடுகள் கூறத்தலைப்பட்டன. அமெரிக்கா குர்திஸ் மக்கள் மீது நடத்தப்பட்ட இந்தக் கொடிய தாக்குதலில் ஏற்பட்ட அழிவை "இலக்கு தவிர்ந்த பாதிப்பு" என்ற அர்த்தத்தில் கொலெற்றல் டமேஜ் (collateral damage) என்றது. ஒரு இராணுவ இலக்கு ஒன்று தாக்கப்படும் பொழுது, இராணுவ இலக்கு சாராத மற்றைய பாதிப்புக்களை கொலேற்றல் டமேஜ் என்று சொல்வார்கள். உதாரணமாக இராணு அணி மீது கிளைமோர் தாக்குதல் நடத்தப்படுகின்ற பொழுது, திடீரென்று வருகின்று பொதுமக்களின் வாகனம் ஒன்றும் எதிர்பாராத விதமாக அதில் சிக்கிக்கொண்டால், அந்த பாதிப்பை கொலேற்றல் டமேஜ் என்று சொல்லலாம். சர்வதேச சட்டங்களின்படி கொலேற்றல் டமேஜ் ஒரு யுத்தக் குற்றமாக கருதப்படுவது இல்லை.இந்தப் பதத்தினைக் கொண்டு மேற்குலக நாடுகள் ஈராக்கின் பொதுமக்கள் மீதான நச்சுவாயுத் தாக்குதல்களையும் மற்றைய படுகொலைகளையும் நியாயப்படுத்தின. ஆயினும் ஈராக் மீது பல இடங்களில் இருந்து கடும் கண்டனங்கள் கிளம்பின. அமெரிக்க செனட் சபையில் "இனப்படுகொலைகள் தடுப்புச் சட்டம்" (Prevention of Genocide Act) தாக்கல் செய்யப்பட்டது. இந்தச் சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறைக்கு வந்திருந்தால், அமெரிக்க அரசு ஈராக் மீது பல தடைகளை விதிக்க வேண்டி வந்திருக்கும். ஆனால் அன்றைய அமெரிக்க ஜனாதிபதியான "றொனல்ட் றீகன்" தனக்கிருந்த "வீட்டோ" அதிகாரத்தை பயன்படுத்தி, அந்தச் சட்டம் அமுலுக்கு வராது தடை செய்தார். இதன் மூலம் அமெரிக்க அரசு வெளிப்படையாக சதாம் உசேன் நடத்திய படுகொலைகளை ஆதரித்து நின்றது தெளிவாகிறது.இவ்வாறு சதாம் உசேன் செய்த அனைத்துப் படுகொலைகளுக்கு ஊக்கமும் ஆதரவும் ஒத்துழைப்பும் கொடுத்த அமெரிக்காவும் மற்றைய மேற்குலக நாடுகளும் இன்று சதாம் உசேனை மனித இனத்திற்கு எதிரான குற்றங்களை இழைத்தார் என்று சொல்லி படுகொலை செய்து விட்டன.அத்துடன் கடந்த 15.01.07 அன்று சதாமின் ஒன்றுவிட்ட சகோதரரும் ஈராக்கின் புலனாய்வுத்துறை அதிகாரியுமான பர்ஸான் அல் திக்ரிதியும், ஈராக்கின் தலைமை நீதிபதியான அவாத் அல் பந்தரும் தூக்கில் இடப்பட்டு படுகொலை செய்யப்பட்டு விட்டார்கள். இதில் பர்ஸானின் தலை தூக்கில் இடப்பட்டு கீழ் நோக்கி வேகமாக இறங்குகின்ற பொழுது, துண்டிக்கப்பட்டும் விட்டது. இவர்களும் சதாமின் கல்லறைக்கு அருகே அடக்கம் செய்யப்பட்டு உள்ளார்கள்.சதாம் உட்பட இந்த மூவரும் மனித குலத்திற்கு எதிரான பல குற்றங்களை இழைத்தவர்கள்தான். மிகப் பெரும் குற்றமாக ஹலப்ஜா மீதான நச்சுவாயுத் தாக்குதல் அமைகிறது. அத்துடன் ஈரான் மீதும் பல முறை நச்சுவாயுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இவர்கள் இந்தக் குற்றங்களுக்காக தண்டிக்கப்படவில்லை. அவைகள் குறித்த விசாரணைகள் நீதிமன்றத்தில் இருந்தாலும், துஜைல் நகரில் 143 சியா முஸ்லீம்களை படுகொலை செய்ததற்காகவே தண்டிக்கப்பட்டிருக்கிறார்கள். அதுவும் மற்றைய குற்றங்கள் பற்றி விசாரணை வரும் முன்னே அவசரம் அவசரமாக படுகொலை செய்யப்பட்டு விட்டார்கள்.இதற்கு காரணம் இருக்கிறது. ஏற்கனவே சொன்னது போன்று சதாமின் ஆட்சியில் நடந்த படுகொலைகள் வெளியில் தெரிய வந்த பொழுது, சதாம் உசேனுக்கு வக்காலத்து வாங்குகின்ற வேலைகளையே மேற்குலகம் செய்தது. சதாமிற்காக பொய்யான ஆதாரங்களையும் சோடித்தன. உதாரணமாக உலகம் அறிந்திருந்த ஹலப்ஜா தாக்குதலுக்காக சதாம் மீது விசாரணை நடைபெற்றிருந்தால், அதில் வெளிவருகின்ற பல செய்திகள் மேற்குலகிற்கு பெரும் சங்கடங்களை உருவாக்கி இருக்கும்.ஆனால் துயைல் நகரில் நடந்த படுகொலைகள் உலகின் கவனத்திற்கு வரவில்லை. அமெரிக்கா ஈராக்கை ஆக்கிரமித்த பின்பே இந்தப் படுகொலைகள் வெளிச்சத்திற்கு வந்தன. ஆகவே இந்தப் படுகொலைகளுக்கு வக்காலத்து வாங்க வேண்டிய தேவை அமெரிக்காவிற்கு இருக்கவில்லை. துயைல் படுகொலைகளக்கு சதாமை தண்டிப்பதில் அமெரிக்காவிற்கு எந்த சங்கடமும் இல்லை.சந்தேகத்திற்கு இடமின்றி சதாம் ஒரு கொடுங்கோல் ஆட்சியே புரிந்தார். ஆனால் சதாம் அமெரிக்காவிற்கு எதிராக செயற்படத் தொடங்கிய பிற்பாடு உலகின் பல பாகங்களில் அவரைப் பற்றிய ஒரு புதிய மதிப்பீடு உருவாகிவிட்டது. அதில் தவறும் இல்லை.இன்றைக்கு உலகின் சமாதானத்திற்கும், பல நாடுகளின் இறைமைக்கும், தேசிய இனங்களில் விடுதலைக்கும் அமெரிக்கா மிகப் பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது. பயங்கரவாத எதிர்ப்பு யுத்தம் என்ற பெயரில் காலனித்துவத்தை புதிய முறையில் நடைமுறைப்படுத்துகிறது. ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் இலட்சக்கணக்கான மக்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்காவை எதிர்க்கத் துணிகின்று யாரும் பெரும்பாலான உலக மக்களால் வீரர்களாக போற்றப்படுவது என்பது இயல்பான ஒரு விடயம். மக்களால் தூக்கி எறியப்பட்டிருந்தால், சதாம் ஒரு கொடுங்கோலனாக மடிந்திருப்பார். அமெரிக்காவால் கொலை செய்யப்பட்டதால், அவர் ஒரு வீரராக மடிந்திருக்கிறார்.ஆனால் சதாமை படுகொலை செய்தது என்ன விளைவுகளை ஏற்படுத்தப் போகிறது? "பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தம்" என்று சொல்லிக்கொண்டு அமெரிக்கா நடத்துகின்ற யுத்தத்தில் சதாம் மீதான படுகொலை எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தப் போகிறது?

(தொடரும்)

இப்பதிவு www.webeelam.com இருந்து தொகுக்கப்பட்டது. நன்றி..,